Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Friday, 9 October 2020

சர்தார்ஜி Jokes

குர்பசன் சிங் அப்படிங்கிற சர்தார்ஜி பல்கலைக்கழகத் தேர்வு எழுதிட்டு இருந்தாராம்.


கேள்விகள் எல்லாமே ஆம்/இல்லைன்னு பதில் சொல்ற ரகம். பரிட்சை கூடத்துல நம்மாளு போய் ஒக்காருறாரு, அஞ்சு நிமிஷம் கேள்வித் தாளைப் பாக்குறாரு.


அதுக்கப்புறம் ஒரு வேகம் வந்தவரா, தன்னோட பேண்ட் பாக்கெட்லருந்து ஒரு காசு எடுத்து சுண்டி போட்டு தலை விழுந்துதுன்னா ஆம்ன்னு பூ விழுந்ததுன்னா இல்லைன்னும் பதில் எழுத ஆரம்பிக்கிறாரு.


அரை மணி நேரத்துல இந்த மாதிரி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிச்சிடறாரு. அதுக்கப்புறம் பாத்தா திடீர்னு டென்சன் ஆகிடறாரு. வேர்த்து விறுவிறுத்து போயிடறாரு.


பரிட்சை ஹால்ல இருந்த வாத்தியாரு சர்தார்ஜி கிட்ட வந்து "என்னப்பா என்னாச்சு? ஏன் டென்சனா இருக்கே?"ன்னு கேட்டாராம்.


அதுக்கு சர்தார்ஜி சொல்றாராம்" சார்! நான் முதல் அரை மணி நேரத்துலயே பதில் எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்... ஆனா இப்ப எழுதுன பதில் எல்லாம் சரியான்னு அதே மாதிரி காசை சுண்டி போட்டு சரி பாத்துட்டு இருக்கேன்


🤣🤣🤣

சர்தார்ஜியிடம் ஒருவர்...


ஒருவர் : “நீங்க எங்க பிறந்தீங்க..?


சர்தார்ஜி : “பஞ்சாப்பில்...


ஒருவர் : “பஞ்சாப்பிலே எந்த பாகம்?”


சர்தார்ஜி : “எந்த பாகமா? மொத்த உடலும் பஞ்சாப்பிலேதான் பிறந்தது”


🤣🤣🤣

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...


சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது


சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...


🤣🤣🤣

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள்.


சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு.


ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது.


இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம்.


சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம்.


அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம்.


இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"


🤣பின்லேடனை பிடி‌ச்சா 5 லட்சம் பரிசு என்று போலி‌ஸ் அ‌றி‌வி‌த்தவுட‌ன், சர்தார்ஜி நேராக போலிஸாரிடம் போய் எனக்கு 5 லட்சம் குடுங்க என்று கேட்டிருக்கிறார்.


ஏன் என்று கேட்ட போலி‌ஸ் அதிகாரி பதிலை கேட்டவுடன் தலைசுற்றி விழுந்து விட்டாரம்.


சர்தார்ஜி சொன்னாரா‌ம், எனக்கு பின்லேடனை ரொம்பப் புடிச்சிருக்கு.


🤣🤣🤣

No comments:

Post a Comment