Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Friday, 14 February 2020

திருக்குறளில் உலக சாதனை நிகழ்த்திய அரசுப்பள்ளி மாணவி



திருக்குறளில் உலக சாதனை நிகழ்வாக 200 குறள்களை  5.39 நிமிடங்களில்  சொல்லி அசத்தினாள் என் இரண்டாம் வகுப்பு  செல்லம்கிருத்திகா ஹரினி.சிவகாசி லயன்ஸ் கிளப் மற்றும் தமிழால் இணைவோம்  அமைப்பு , சென்னை லயன்ஸ் விஷன்  நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மின்னலென குறள்களை  ஒப்புவித்தாள் குழந்தை. மீடியாக்களும், பொதுமக்களும் சூழ்ந்து கொண்டனர்செல்லத்தை.

ஒரு லட்சம் ரூபாய் கல்வி வைப்புத் தொகையாக அவளது பெயரில் லயன்ஸ் கிளப்  அமைப்பு தந்தது.
 பள்ளியில் சேர்த்த பொழுதினை விட உன்னை சான்றோன் எனக்கேட்டு பெரிதுவக்கும் ஆசிரியராக மகிழ்கிறேனடா.
  நேற்றைய தருணங்களில் கலங்கிப் போய் நிற்கிறேனடா செல்லம் ஹரினி.வார்த்தைகள் இல்லை எனக்கு.கண்ணீர் மட்டுமே என்னிடம்.





     உதவிக்கரம் நீட்டிய லயன்ஸ் கிளப் சிவகாசி, சென்னை தமிழால் இணைவோம்,ஆசிரியத் தோழமைகள்,ஹரினியின் பெற்றோர் triumph world record அமைப்பு ,அனைத்திற்கும் வழிகாட்டியாக இருந்த  இறைவனுக்கும் நன்றி.

No comments:

Post a Comment