Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Thursday, 16 April 2020

காற்று...



விழியில்லாக் காற்று
வழி பார்த்து நடக்கிறது
வியர்வைத் துளிகளை
விசிறி வீசி ஆற்றுகிறது

வீட்டின் அகல்விளக்கையும்
உடம்பின் உயிர் விளக்கையும்
அழகாய்ஏற்றுகிறது
கைகள் இல்லாக் காற்று

மனதில் பாரமாய் அமரும் நேற்று
மன காயத்திற்கு மருந்து காற்று

உன் பெயருக்கு பின்னால்
சாதி மத கயிறுகள்..சங்கிலிகள்
பெயருக்குப் பின்னால்
கட்டுப்பாடுகள் இல்லாதது
காற்று மட்டும்தான்

காற்று தூசுக்களை தூற்றுகிறது
சில நாக்குகளோ...
ஓய்வில்லாமல் தூற்றுகிறது. முடிந்தவரை.. அடுத்தவரை ..

காற்று உன் காதலி
காதலியை நீ கைவிட்டாலும்
காற்று உன்னை கைவிடுவதில்லை

காற்று
மரங்களின் கிளைகளில்
உன்னை தாலாட்டியது
நீயோமரங்களை வெட்டி
காற்றுக்கு ...
மலர்வளையம் வைக்கிறாய்

நிறைவாய் ஒன்று
உணர்ந்தால் நன்று

காற்றின் முடிச்சில்
உள்ளது
மூச்சின் வாழ்க்கை

நம்மை சுகமாய்வாழவைக்கும் காற்றையும்
கொஞ்சம் சுத்தமாய்
வாழவைப்போம்
                 கே.வி.குமார்

No comments:

Post a Comment