Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Tuesday, 14 April 2020

அகவிலைப்படி உயர்வு எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

அகவிலைப் படி என்பது விலைவாசி உயர்வு புள்ளிகளின்
அடிப்படையில் சில கணக்கீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

 2019 டிசம்பர் மாதம் வரை விலைவாசி உயர்வு எவ்வளவு என்பது, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி தான்,  AICPIN யின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

இதன் படி அகவிலை உயர்வுக்கான சதவீதம் பற்றி, மத்திய அரசின் நிதித்துறை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பும்.

இதனை மத்திய அரசின் அமைச்சரவை (கேபினட்) ஆய்வு செய்து, அகவிலைப்படி உயர்வுக்கான ஒப்புதலை வழங்கும்.

இதன் பிறகு மத்திய அரசு முறைப்படி அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிக்கும். இது பெரும்பாலும் மார்ச் முதல் வாரம் தான் அறிவிக்கப்படும்.

இதன் பிறகு, மத்திய அரசு முறையாக அரசாணை பிறப்பிக்கும்.

இந்த அரசாணையைப் பின்பற்றி தான் மாநில அரசுகள், தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மற்றும் இதற்கான அரசாணையை பிறப்பிக்க இயலும். இது பெரும்பாலும் மார்ச் கடைசியில் அல்லது ஏப்ரல் முதல் வாரம் தான் அறிவிக்கப்படும்.

ஆகவே மத்திய அரசு அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை பிறப்பிக்காமல், மாநில அரசுகள் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க இயலாது.

No comments:

Post a Comment