Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Wednesday, 20 May 2020

ஆந்திராவில் வரும் ஆகஸ்டு 3ம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் வரும் ஆகஸ்டு 3ம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் பள்ளி திறக்கும்தேதி அறிவிப்பு: தமிழகத்தில் எப்போது?

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டுள்ள நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை

இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 3 முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெகநாதன் ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நடைபெறாமல் இருக்கும் நிலையில் ஜூலை மாதத்தில் இந்த தேர்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் பள்ளிகளை புனரமைப்பதற்கான ரூ.456 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் நவீனமயமாக மாற்றப்படும் என்றும் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த நிலையில் ஆந்திராவை அடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment