முக்கியமாக பாதுகாக்க வேண்டிய ஆவணங்கள்:
1) ஓய்வூதியர் புத்தகம் (PENSION BOOK.)
2) வங்கிக் கணக்கு புத்தகம்.
3) ஆதார் அட்டை,
4) பான்கார்டு,
5) ஹெல்த் இன்சூரன்ஸ் கார்டு
6) அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை விவரங்கள்
7) அவசர கால தேவைக்கு சிறிதளவுதொகை.
8) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
9) தொலைபேசி எண்கள் குறித்து வைத்துள்ள சிறு நாட்குறிப்பேடு.
ஓய்வூதியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. ஓய்வூதிய புத்தகம், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில் தங்கள்
பெயரும், வாரிசுதாரர் பெயரும் எழுத்துப் பிழை இல்லாமல் சரியாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள
வேண்டும். (அனைத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்).
2. ஓய்வூதியம் பெற்று வரும்
ஓய்வூதியதாரர்கள் தங்கள் வங்கி கணக்கு புத்தகத்தை வாரிசுதாரர் உடன் சேர்த்து (Joint Account)
ஆக மாற்றிக் கொள்ளவேண்டும். (Former Or Survivor)
3. வங்கி கணக்கு புத்தகம் அல்லது ATM அட்டை
காணாமல் போனால், வங்கியின் எந்த எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதை குறித்து
வைத்துக் கொள்ளுங்கள்.
4. ATM அட்டையின் PIN எண்ணை அட்டையின் மீது எழுதி வைக்காதீர்கள். அதனால் பண இழப்பு வர வாய்ப்புண்டு
உங்களுக்கும் உங்கள் மனைவி தேவைப்பட்டால் உங்கள் நம்பிக்கையுள்ளவருக்கு தெரிந்திருக்கலாம்.
5. Passbook | entries
தவறாமல் போட்டுக் கொள்ளுங்கள். வரவுகளையும், செலவுகளையும் சரிபார்த்துக்
கொள்ளுங்கள். குறைந்தது மாதத்திற்கு ஒருமுறை வங்கியில் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
ஓய்வூதியம் வரவு வைக்கப்படும் வங்கி கணக்கு எண்ணை ஒருபோதும் மாற்றாதீர்கள்.
7. முகவரி மாற்றம் குறித்த
விவரங்களை உடனுக்குடன் கருவூலத்திற்கும், வங்கிக்கும் தெரிவிக்க வேண்டும்.
8. முதன் முதலில் கருவூலத்தில் அளிக்கப்படும் செல்போன் எண்ணை ஒருபோதும் மாற்றாதீர்கள்.
9. ஒவ்வொரு முறையும் கருவூலத்திற்கு
அனுப்பப்படும் கடிதத்தில் தங்களது PPO எண். செல்போன் எண். வங்கி
கணக்குஎண். ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிடவும்.
10. ஓய்வூதியம் சம்பந்தமாக கருவூலத்திற்கு செல்லும் போது
வாழ்க்கைத் துணையுடன் செல்லலாம்.
அலுவலர் களை எவ்வாறு அணுகி ஓய்வூதியம் சம்
பந்தப்பட்ட தகவல்கள் பெறலாம் என்பதை தெரிவியுங்கள்.
ஓய்வுதியதாரர், தங்கள்
காலத்திற்கு பின்னர். குடும்ப ஓய்வூதியம் பெற
மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை
-வாரிசுதாரருக்கு ( மனைவிக்கு) தெரிவியுங்கள்.
11. உடல் நலம், மன நலம் பேண நடைப்பயிற்சி
மேற்கொள்ளுங்கள்,
நண்பர்களோடு பேசுங்கள்.
மனதை 'Relax' ஆக வைத்திருங்கள்.
வாய்ப்புள்ள போது குடும்பத்துடன் சுற்றுலா
சென்று வாருங்கள்.
(ஓய்வூதியர்களாகிய நாம் மேற்கூறியவற்றை சுய ஆய்வு செய்வோம். அது நமக்கும் நம் குடும்பத்திற்கும் பயனுள்ளதாய் இருக்கும்)
நன்றி
No comments:
Post a Comment