Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Sunday, 2 March 2025

அடடடா...! இத்தனை நாளாய் இது தெரியாமல் போச்சே....!

*"வெந்த + அயம் : வெந்தயம் 

அயம் என்றால் இரும்பு . இரும்பு சத்து  நமக்கு தேவை ஆனால் வெந்த இரும்பைதான் சாப்பிடமுடியும் அதான் பஸ்பம் செந்தூரம் அந்த சத்து முழுக்க வெந்தயத்தில் உள்ளது


"வெப்பம் + இல்லை :  வேப்பிலை.! உடல் வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் வேப்பிலை.!"


"கரு + வெப்பம் + இல்லை : கருவேப்பிலை.! கருப்பை வெப்பத்தை இல்லை என்று ஆக்கும் அதுதான் கருவேப்பிலை.!"


"அகம் + தீ :  அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அதுதான் அகத்தி.!"


"சீர் + அகம் : சீரகம் அகத்தின் சூட்டைச் சீராக்கும் அதுவே சீரகம்.!"


"காயமே இது பொய்யடா., வெறும் காற்றடைத்த பையடா.!  காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்.!"


"வெம்மை + காயம் : வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் அதுவே வெங்காயம்.!"


"பொன் + ஆம் + காண் + நீ அதுதான் பொன்னாங்கண்ணி.! அதை நீ உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ.!"


"கரிசல் + ஆம் + காண் + நீ அதுதான் கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலில் தேய்த்தால் கூந்தலை கரிசலாக்கும் காண்நீ.!"


இப்படிப்பட்ட சொற்களுக்குள் தான் மருத்துவத்தை வைத்தார்கள் நமது மகத்தான பாட்டன்மார்கள்.!


"செம்மொழி" தமிழ்ச் சொற்களை மறந்தோம்.!


நமது பாரம்பரிய மருத்துவத்தை மறந்தோம்.!!


அவைகளைச் சொன்ன பாட்டியையும் மறந்தோம். பாட்டனையும் மறந்தோம்.!"

மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும் .. 🙏

No comments:

Post a Comment