Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Wednesday, 15 April 2020

புத்தாண்டே வருகவே!


புத்தாண்டே வருகவே!
    புதுப்பொலிவு தருகவே!
கொத்தாய் கொல்லும்
      கொரோனா கொடுநோய்
முற்றாய் அழிந்து போய்
    மனித குலம் மகிழவே,
ஊரடங்கு நிலையாலே
     உருக்குலைந்த உலகமாந்தர்
சீரடைந்து சிறப்புற்று,
   பாரெல்லாம் தழைக்கவே,
படர்ந்து நின்ற துன்பங்கள்
     பறந்தோடி போகவே,
கடந்து வந்த கவலைகள்
     காணாமல் கலையவே,
இன்னல்கள் நீங்கியே
      இன்பங்கள் தங்கவே,
இல்லாமை நலிந்து
      இல்லங்கள் உயரவே,
வான் மழை பொழிந்து
      நீர் வளம் நிறையவே, 
வயல்கள் விளைந்து
     வளங்கள் வளரவே,
வருவாய் புத்தாண்டே!
      நல்லாண்டாய் மலர்வாயே!

மனம் கனிந்த புத்தாண்டு
      நல்வாழ்த்துக்கள். தி,மாதப்பன்  பட்டதாரி ஆசிரியர் மாநில கொள்கை பரப்புச் செயலர் PBTTA KRISHNAGIRI D

No comments:

Post a Comment