MRB தேர்வு எழுதி General Category யில் தேர்வான மாணவர்கள் CV (Certificate Verification) க்கு அழைக்கப்பட்டு நிராகரிக்கப்படும் அவலம்.
காரணம்
1. July 15-க்குள் Chennai MGR பல்கலைக் கழகத்தில் தங்களுடைய MBBS Course முடித்ததை பதிவு செய்யவில்லை என்பதுதான்.
பதிவு செய்யாமைக்கு காரணங்கள்
1. Course May மாதமே முடிந்துவிட்டாலும் அதற்கான சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் தாமதமாக வழங்கியது.
2. பல மாணவர்கள் MGR பல்கலைக் கழகத்தில் பதிவு செய்ய July 15 முன்பே ஆன்லைனில் விண்ணப்பித்தபோது கூட்டத்தை தவிற்கும் பொருட்டு July 15 க்கு பிறகு அனுமதி (slot) வழங்கியது.
3. MGR பல்கலைக் கழகத்தை தொடர்பு கொண்டால் 15 முன்பே ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் விவரம் அரசுக்கு கிடைக்கும். அவர்களுக்காவது அரசு அனுமதி அளித்து கருணை காட்டலாம்.
கால தாமதமான தேர்வு
OCTOBER, NOVEMBER 2024-ல் நடைபெரும் என எதிர் பார்த்த MRB தேர்வு JANUARY-2025 க்கு தள்ளிபோனது. அதேபோல் MGR பல்கலைக் கழக பதிவையும் ஓரிரு மாதங்கள் தள்ளி வைத்தால் மருத்துவ மாணவர்கள் நிம்மதி பெறுவார்கள்.
கடினப்பட்டு தேர்வு எழுதினர்
1. நேரம் ஒதுக்கி படித்து , தேர்வு கூட நகரை தேடி அழைந்து கண்டுபிடித்து தேர்வு எழுதினர்.
MRB TENTATIVE KEY ANSWER
MRB RESULT விடப்பட்டு அம்மாணவர்களும் தான் எழுதியது சரி என்பதற்காக பல புத்தகங்களை அலசி ஆராய்ந்து , விண்ணப்பித்து மதிப்பெண்களை பெற்றனர்.
MRB RESULT
MRB RESULT வந்த அன்று ஆர்வத்துடன் தன்னுடைய மதிப்பெண், கூட்டி வந்துள்ளதா என்று பார்த்து மகிழ்தனர்.
CV Call Letter (Certificate Verification)
06.02.2025 அன்று வெளியிடப்பட்டது. அதில் GENERAL CATEGORY, மற்ற Category யில் தங்கள் தேர்வு எண் வந்ததை அறிந்தனர்.
12.02.2025 முதல் CV க்கு நேரில் ஆஜர் ஆகினர்.
அப்போதுதான் " நீங்கள் July 15 க்குள் பதிவு செய்யவில்லை. ஆகவே நீங்கள் INVALID Person " என்று கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு மாணவ மருத்துவர்கள் ( Doctor's ) மனம் உடைந்து இருக்கிறார்கள்.
தற்போது...
1. Chief Minister, Deputy Chief Minister, Health Minister, Director, ... என அனைவருக்கும் Mail அனுப்பியுள்ளனர்.
2. அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தங்கள் கோரிக்கையை முன்வைத்து உள்ளனர்.
தீர்வு
1. தாய் உள்ளத்தோடு இக்கோரிக்கையை பரிசீலித்து , அவர்களுக்கு பணி ஆணை வழங்கலாம். ( ஏனென்றால் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதில் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ள குடும்பங்களிலும், நடுத்தர குடும்பங்களிலும் இருந்து வந்தவர்கள் )
2. 27.05.2020 அன்று இதேபோல் பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவர்களுக்காக அரசு ஒரு Notification வெளியிட்டு அவர்களை பணியமர்த்தியது.
இதோ அந்த Notification
இது போல் ஒரு Notification வெளியிட்டு அம் மருத்துவ மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் மன வருத்தத்தில் இருந்து அரசு மீட்கலாம்.
மருத்துவ மாணவர்களின் துயர் துடைக்க அரசு முன் வருமா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
---இச்செய்தி அரசுக்கு எட்டும் வரை அனைத்து குழுவிற்கும் அனுப்பவும்.
No comments:
Post a Comment