Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Wednesday, 26 February 2020

அறிவியல் உண்மைகள்.



01. விண்வெளியில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் அதிக மரங்கள் உள்ளன!
நாசா வல்லுநர்களின்படி, நமது பால்வெளி மண்டலத்தில் 100 பில்லியன் முதல் 400 பில்லியன் நட்சத்திரங்கள் வரை எங்கும் இருக்க முடியும். மறுகையில், 2015 ஆம் ஆண்டில் வெளியோடப்பட்ட நேச்சர் பத்திரிகை ஆய்வு அறிக்கையின் படி உலகெங்கிலும் உள்ள மரங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.04 டிரில்லியன் மரங்கள் உள்ளன.

02. ஆக்ஸிஜனுக்கு நிறம் உண்டு!
ஒரு வாயுவாக, ஆக்சிஜனுக்கு மனமும் கிடையாது, நிறமும் கிடையாது. ஆனால் அதன் திரவ மற்றும் திட வடிவங்களில், இது வெளிர் நீல நிறமாக இருக்கிறது.
 

03. பீரியாடிக் டேபிளில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் இருக்காது!
அது 'ஜே' ஆகும். நம்பிக்கை இல்லை என்றால் இப்பதே கெமிஸ்ட்ரி புக்கை எடுத்து ஒருமுறை பரிசோதனை செய்து பார்த்து விட்டு வாருங்கள். நீங்கள் அடுத்த உண்மையை பற்றி அறிந்துகொள்ளும் வரை நாங்கள் காத்திருக்கிறோம்.
 
04. வாழைப்பழத்தில் கதிரியக்கம் உள்ளது!
இது நம்மிடம் மறைக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளில் ஒன்றாகும். வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, அதன் பொட்டாசியம் சிதைவு அடையும் பொபோது அவைகள் சற்றே கதிரியக்கத்தை உருவாக்குகின்றன என்பது தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. கதிர்வீச்சு விஷத்தை உட்கொள்ள ஒரே நேரத்தில் நீங்கள் 10,000,000 வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். (ஆதாரம் : ஃபோர்ப்ஸ் அறிக்கைகள்)
இந்தப் பொருளைப் பயன்படுத்தி 4 வாரத்தில் 25 கிலோ குறையுங்கள் (
2 வாரம் பயன்படுத்துங்கள்,100% முடிவைப் பெறுங்கள்..இன்றே தொடங்க
3 வாரத்தில் 28 கிலோ எடை குறைத்த பெண்! வாயை பிளந்த டாக்டர்!! 

05. குளிர்ந்த தண்ணீரைவிட ஹாட் நீரை வேகமாக உறைகிறது!
இந்த உண்மை முரண்பாடாகத் தோன்றலாம். இது பெம்பா விளைவு என்று அழைக்கப்படுகிறது. அதாவது இதை கண்டு அறிந்த, டான்சானிய மாணவர் எராஸ்டோ பெம்பாவின் பெயரை குறிப்பிடுகிறது. 'நீர் துகள்களின் வேகத்தொகை ஆனது குறிப்பிட்ட சூழலைக் கொண்டிருக்கும்போது, ​​அவை சூடாக இருக்கும்போது இன்னும் உடனடியாக நிறுத்தப்படலாம்' என்பது இதன் விளக்கம். 

06. குளிர் தண்ணீர் சூடான நீரை விட விரைவாக வெப்பப்படுத்துகிறது!
பெம்பா விளைவுக்கான காரணத்தை ஆராயும் ஆராய்ச்சியாளர்கள் இந்த கண்டுபிடிப்பையும் ஆராய்ந்து உறுதி படுத்தினார்கள். கூடுதல் சுவாரசியம் என்னவெனில் இதற்கு இன்வெர்ஸ் பெம்பா விளைவு, அதாவது தலைகீழ் பெம்பா விளைவு என்று பெயர் சூட்டி உள்ளனர்.
 

07. மனிதர்கள் பூஞ்சைக்குத் தொடர்புடையவர்கள்
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் மூலம், கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, தாவரங்கள் இருந்து வந்த மரபணுக்களின் வழியாக மனிதகுலம் உருவாகியிருக்கலாம் என்று கண்டு அறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வானது, சுமார் 1 சதவிகிதம் மனித மரபணுக்கள் ஆனது தாவரங்களில் இருந்து பெறப்பட்டு உள்ளது என்கிறது.
 

08. ஆனால் கவலை வேண்டாம் - நமக்கு நிறைய டி.என்.ஏ உள்ளது!
மனித மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ வின் எண்ணிக்கை ஆனது சுமார் 3 பில்லியன் அடிப்படை ஜோடிகளும், சுமார் 25,000 மரபணுக்களும் (ஜீன்ஸ்) உள்ளன என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். மனித உடலின் 10 டிரில்லியன் செல்களிலும் அந்த மரபணுவின் முழு நகல் காணப்படுகிறதாம், அந்த டி.என்.ஏ எல்லாவற்றையும் வரிசைப்படுத்தினால், அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரத்தை விட 100 மடங்கு அதிகமாக நீளுமாம்.
 

09. மற்ற கிரகங்களில் வைர மழை பெய்யும்!
ஆம், நீங்கள் சரியாக தான் படித்து உள்ளீர்கள். நெப்டியூன், யுரேனஸ், ஜுப்பிடர் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் வைரங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த நான்கு கிரகங்களிலும் உள்ள வளிமண்டலங்கள் கார்பன் அணுக்கள் இருப்பதால், தீவிரமான அழுத்தத்தின் கீழ் அவை வைரங்களாக மாறுகின்றன. குறிப்பாக நெப்டியூன் மற்றும் யுரேனஸில் இந்த வைர மழை நிகழ்வது - ஆய்வக நிலைமைகளின் வழியாக - நிரூபணம் ஆகியுள்ளது. சனி கிரகத்தை பொறுத்தமட்டில், ஆண்டுக்கு சுமார் 2.2 மில்லியன் பவுண்டுகள் எடை அளவில் வைரங்கள் மழையாக பெய்யும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.
 

10. உங்களால் பந்துகளை பறக்க வைக்க முடியும்!
நீங்கள் சுழற்றிக்கொண்டே ஒரு பந்தை கைவிடும்போது, பலத்த காற்று வீசும் பட்சத்தில் அது பறந்து போகும் என்கிறது அறிவியல். இதை மேக்னஸ் விளைவு என்று அழைகிறார்கள். இந்த விளைவு தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டை ஒரு தந்திரமான மற்றும் எளிமையான விளையாட்டாக மாற்றுகிறது.
 
நன்றி

No comments:

Post a Comment