Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Saturday, 16 May 2020

பொது அறிவு வினா – விடைகள்



1. ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
ஒரே ஒரு முறை.
2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
ஓம்.
3. முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
இத்தாலி.
4. கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
இங்கிலாந்து.
5. கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
யூரி.
6. வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
சிக்ஸ்.
7. சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
எகிப்து நாட்டவர்கள்.
8. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
வில்கின்சன்.
9. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
1912-ல்.
10. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
ரோஸ்.
11. தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?
லேண்ட் டார்ம்.
12. தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?
சயாம்.
13. கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?
ராஜஸ்தான்.
14. கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?
1593.
15. மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?
26 மைல்.
16. ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?
கி.பி.1560.
17. காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?
சிக்காகோ.
18. ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?
1920.
19. தடுக்கப்பட்ட நகரம் எது ?
லரசா.
20. நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?
420 மொழிகள்.
21. இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா.
22. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
ஜப்பான்.
23. ஒமன் தலைநகரம் எது ?
மஸ்கட்.
24. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
ரோமானியர்கள்.
25. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்.
26. ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?
ஏப்ரல் 29 -ம் தேதி.
27. ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?
1752-ல்.
28. இத்தாலியின் தலை நகர் எது ?
ரோம்.
29. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?
ஜீ.வீ.மாவ்லங்கர்.
30. தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
ஆனை முடி.
31. நாடுகளி்ன் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்?
ஆடம் ஸ்மித்.
32. பொருளாதாரத்தின் தந்தை யார்?
ஆடம் ஸ்மித்.
33. நலம்சார் அறிவியல் என்ற பொருளாதார கொள்கையை கூறியவர் யார்?
மார்ஷல்.
34. சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது?
பொருளாதாரம்.
35. உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாட்டை கூறியவர்?
எட்வின்கேனன்.
36. மக்கள் தொகை கோட்பாடு என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?
ராபர்ட் மால்தஸ்.
37. உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார்?
ராபர்ட் மால்தஸ்.
38. இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?
1991.
39. தற்போது இந்தியாவி்ல் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
19.
40. இந்தியாவின் தலவருமானம் எவ்வளவு?
ரூ.17,977.7
41. நம் நாட்டில் தலவருமானம் உயர்ந்து காணப்படும் மாநிலம் எது?
பஞ்சாப்.
42. நம் நாட்டில் தலவருமானம் குறைந்து காணப்படும் மாநிலம் எது?
பீகார், ஒரிஸா, ராஜஸ்தான்.
43. வறுமை ஒழிப்பில் முதலிடம் பெற்ற திட்டம் எது?
இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டம்.
44. இந்தியாவின் பொருளாதார வல்லுநர்கள் யார்?
அமர்தியா சென், ராஜம் கிருஷ்ணா.
45. நாட்டு வருமானத்திற்கு இலக்கணம் வகுத்தவர்கள் யார்?
ஆல்பிரட் மார்ஷல், பால் சாமுவேல்சன்.

ஆதாரம் : தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி மையம்.

நன்றி...

No comments:

Post a Comment