Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Tuesday, 6 October 2020

வாகனங்களின் நம்பர் பிளேட் - கட்டுப்பாடுகளை அறிவித்து அரசு - மீறினால் கடும் நடவடிக்கை


சென்னையில் சமீபகாலமாக வாகனங்களின் நம்பர் பிளேட் மோட்டார் வாகன சட்டத்தில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைப்படி இல்லாமல் பல்வேறு அளவுகளில் உள்ளது. எனவே, நம்பர் பிளேட்டில் பின்பற்றப்பட வேண்டிய நிறம், தகட்டின் அளவு, எழுத்து மற்றும் எண் ஆகியவற்றின் அளவு, இடைவெளி குறித்த விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும். 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் புதியதாக வாகனப்பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள விவரம்:

* 700 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் முன்பக்கம் நம்பர் பிளேட்டில் எண் 15 மி.மீ. உயரம், அகலம் 2.5மி.மீ. நம்பருக்கு இடையே 2.5 மி.மீ. இடைவெளி இருக்க வேண்டும்.

* அனைத்து இருசக்கர வாகனங்களின் பின்பக்கம் நம்பர் பிளேட்டில் எழுத்தின் உயரம் 35 மி.மீ, அகலம் 7 மி.மீ., நம்பருக்குள் இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும்

* மூன்று சக்கர பயனற்ற வண்டிகளின் நம்பர் பிளேட்டில் பின் பக்கம் எழுத்தின் உயரம் 40 மி.மீ., அகலம் 7 மி.மீ., நம்பருக்குள்ளான இடைவெளி 5மி.மீ. இருக்க வேண்டும்.

* 500 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன் மற்றும் பின் பக்கம் எழுத்தின் உயரம் 35 மி.மீ, அகலம் 7 மி.மீ., நம்பருக்குள்ளான இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும்.


* 500 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களின் நம்பர் பிளேட்டின் முன் மற்றும் பின் பக்கம் எழுத்தின்  உயரம் 40 மி.மீ, அகலம் 7 மி.மீ., நம்பருக்குள்ளான இடைவெளி 5 மி.மீ. இருக்க வேண்டும்.

* மற்ற அனைத்து மோட்டார் வாகனங்களின் முன் மற்றும் பின் பக்க நம்பர் பிளேட்டின் எழுத்து உயரம் 65 மி.மீ., அகலம் 10 மி.மீ., எழுத்தின் இடைவெளி 10 மி.மீ. இருக்க வேண்டும்.

* அனைத்து தனியார் வகை வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் வெள்ளையாகவும் எழுத்து கருப்பிலும் இருக்க வேண்டும். வாகன பதிவு எண் ஒன்று அல்லது இரண்டு வரிசையில் இருக்க வேண்டும்.

* அனைத்து வகை வர்த்தக வாகனங்களில் நம்பர் பிளேட்டின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். எழுத்து கருப்பு நிறத்தில் இருக்க வேண்டும். முன்னும் பின்னும் இரண்டு வரிசையில் வாகன பதிவு எண் இருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment