வாழைப்பழம் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்தே நம் முன்னோர்களால் விரும்பி சாப்பிடபட்ட பழம்.
எல்லா காலங்களிலும் கிடைக்கும் என்பதால் வீட்டில் நடக்கும் விசே ஷங்கள், பண்டிகைகள், சுபநிகழ்ச்சிகள் என எதுவாக இருந்தாலும் முக்கிய இடம்பிடித்து விடும்.
அதனால் தான் முக்கனிகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. நார்ச்சத்து, இயற்கையான சர்க் கரை சத்து, இரும்புச்சத்து, டிரிப்தோபன், புரோட்டின், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத் துகள் நிறைந்திருக்கிறது. இவ்வளவு சத்துகளையும் மொத்தமாக கொண்டிருக்கும் வாழைபழத்தின் விலையும் அதிகமில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வெண்டும்.
ஆய்வு ஒன்றில் உடல் ஆற்றல் இழந்தது போல் உணரும் போது இரண்டு வாழைப்பழங் களை சாப்பிட்டால் ஒன்றைரை மணி நேரம் வரை உடல் ஆற்றலாக இயங்கும் என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.
அதே நேரம் பலருக்கும் இருக்கும் சந்தேகம் வாழைப்பழத்தை நன்றாக பழுத்த பிறகு சாப்பிடுவதா அல்லது சற்று காயாக இருக்கும் போதே சாப் பிடுவதா என்பதுதான். இது குறித்து ஆய்வுகள் என்ன சொல்கிறது பார்க்கலாம்.
வித்தியாசம் உண்டா"
வாழைப்பழம் சாப்பிடுவதில் பலருக்கும் பலவித சுவைகள் பிடிக்கும். சிலர் வாழைப் பழம் ஓரளவு பழுத்தது போன்ற நிலையில் மஞ்சள் நிறமும் இலேசான பச்சை நிறமும் இருக்கும் காய் பழம் இரண்டும் கலந்த நிலையில் இருக்கும் போது(மென்று சாப்பிடும் அளவுக்கு) சாப்பிட விரும்புவார்கள்.
சிலர் நன்றாக பழுக்கும் வரை காத்திருந்து பழங்களில் தோல் முழுக்க மஞ்சள் நிறத்தில் கருப்பு நிற புள்ளிகள் தெரியும் வரை வைத்திருந்து அதன் பிறகு (வாயில் வைத்தால் வழுக்கி கொண்டு போகும் அளவு) சாப்பிடுவார்கள்.
இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்.ஆனால் வாழைப்பழம் பழுக்கும் ஒவ் வொரு நிலையையும் கணக்கில் கொண்டு உங்கள் ஆரோக்கியத்தின் நன்மைகளும் மாறுபடுகிறது என்கிறார்கள்.
ஆம் பழத்தை பழுக்க வைக்கும் இயல்பாக பழுக்கும் ஒவ்வொரு நிலையையும் ஒன்று முதல் 15 வரையான நிலையை குறிப்பிடுகிறார்கள்.
முதல் நிலை வாழைத்தாரை பறிப்பதில் தொடங்கி இறுதி நிலையான 15 என்னும் எண்ணானது முற்றிலும் கருப்பு நிறமடைவது வரை குறிக்கப்படுகிறது. கிட்ட தட்ட அழுக போகும் நிலை... இதில் நீங்கள் எந்த நிலையில் சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்து உங்கள் ஆரோக்கிய நன்மைகள் சில மாற்றங்கள் உண்டாகக்கூடும்.
ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு சத்து..
இங்கிலாந்து சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான ரியானன் லம்பேர்ட் என்பவர் வாழைப் பழம் குறித்து எ சிம்பிள் வே டு ஈட் வெல் என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டசத்துகள் நிறைந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் நீங்கள் உண்ணும் பழத்தின் ஒவ்வொரு நிலையை பொறுத்து அதில் கிடைக்கும் நன்மைகளும் வேறுபடும் என்று குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் பலரும் 8 முதல் 10 நிலையில் பழுத்திருக்கும் வாழைப்பழங்களை விரும்புகிறார்கள். இந்த நிலையில் பழம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் பழுத்து காணப்படும். இடையில் கருப்பு புள்ளிகளும் இருக்காது.
சர்க்கரை நோயாளிகள் எந்த நிலை வாழைப்பழம் சாப்பிடலாம்?
இனிப்பு நிறைந்த பழங்களை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடவே கூடாது அதிலும் வாழைப்பழங்களை சாப்பிடவே கூடாது என்று நினைப்பதுண்டு. ஆனால் அதிகம் பழுத்த வாழைப்பழங்களை தவிர்த்து இலேசாக பழுத்த அல்லது பழுக்கும் நிலையில் இருக்கும் முதல் 3 அல்லது 4 நிலையில் சாப்பிட்டு விட வேண்டும். அதாவது இதை பேச்சுவழக்கில் சொல்லும் போது செங்காயாக என்று சொல்வார்கள். இந்த நிலையில் வாழைப்பழங் களை தைரியமாக எடுத்துகொள்ளலாம். இதில் 80 முதல் 90 சதவீதம் வரை ஸ்டார்ச் உள்ளது.வாய்வுத் தொல்லை : அறிகுறி, காரணம், ஆபத்து, தவிர்ப்பது.. எல்லா வயதினருக்கும்..ஆனால் பழுத்த வாழைப்பழங்களில் இந்த ஸ்டார்ச் ஆனது சர்க்கரையாக மாற தொடங்கு கிறது. இப்படி பழுத்த நிலையில் இருக்கும் வாழைப்பழத்தை சாப்பிடும் போது அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்துவிட வாய்ப்புண்டு. அதனால் தான் வாழைபழம் நன்றாக கனிந்து இருந்தால் அதை சாப்பிடவேண்டாம் என்று அறிவுறுத் துகிறார்கள்.
ஜீரண கோளாறு சரிசெய்ய எந்த நிலை வாழைப்பழம்?
நன்றாக கனிந்திருக்கும் வாழைப்பழம் உணவை எளிதில் செரிமானத்துக்கு உள்ளாக்கும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment