Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Sunday, 8 March 2020

"Kerala Special ~ குலுக்கி சர்பத்" - தகடூர் அறிவொளி.

இன்று நண்பகல் உணவுண்ட பின்னர் பழச்சாறகம் சென்றேன்.

இன்றைய சிறப்பு பழச்சாறாக
"Kerala Special ~ குலுக்கி சர்பத்"
என்று அறிவிப்புப் பலகையில் இருந்தது.
இஃதென்ன புதிதாக உள்ளதே...
இதுவரை சுவைத்ததும் இல்லையே...
அதுவுமன்றி
"கேரளா ஸ்பெஷல் குலுக்கி"
என்றால் எப்படி இருக்குமோ என்று மனக்குதிரை தறிகெட்டு ஓடத்துவங்கியது... 😜

இருபத்தைந்து உரூபாய் விலை...
பணியாளர் கொண்டு வரச் சென்றுவிட்டார்...

பெண் பார்க்கச் சென்ற வீட்டில் முறுக்கினை நொறுக்கிய பிறகு தேநீர் கொண்டு வரும் பெண்ணினை முதன்முறையாக காண்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் புதுமாப்பிள்ளை போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்!

குலுக்கி சர்பத் குலுங்காமல் வந்து சேர்ந்தது...

எடுத்தேன்... மேலே பார்த்தால் முழுநீளமாக இரண்டாக வகிரப்பட்ட பச்சைமிளகாய்...
 எலுமிச்சையின் ஒரு சிறுதுண்டு...
சப்ஜா விதைகள் எனப்படும் திருநீற்றுப் பச்சிலை விதைகள் மூன்றும் மிதந்து கொண்டிருந்தன...

கொஞ்சமாக சுவைத்தேன்...
எலுமிச்சைப் பழச்சாறின் புளிப்பும், பச்சை மிளகாயின் கார்ப்பும் இணைந்து பனிக்கட்டியின் குளிர்ச்சியும் கூடுதலாக சேர்ந்து கொள்ள... அதுவொரு புதுசுவையாக இருந்தது...

ஒவ்வொரு மிடறும் தொடங்கும் போது புளிப்பும்...
இடையில் நாக்கில் நிற்கும் போது இனிப்பும்...
 இறுதியில் தொண்டையில் இறங்கும் போது கார்ப்பும்...
 குடலுக்குச் சென்ற பிறகு குளுமையுமாக...
 வேறுபட்ட புதியதோர் படுபாடு!

வாய்ப்பு இருப்பின் நீங்களும் முயன்று பாருங்களேன்...

No comments:

Post a Comment