Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Saturday, 2 May 2020

# மே தினச் சிந்தனைகள் #




அறிஞர் அண்ணா அவர்கள் ஏப்ரல் மாதத்தில் அன்றைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அவர்களை அழைத்து, 'மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என்று கூறினார். அதற்கு தலைமைச் செயலாளர், 'இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. 1957-ல் கேரளத்தில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி அரசுகூட மே தின விடுமுறை அறிவிக்கவில்லை. தமிழக அரசு அறிவித்தால், மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக நேரும்’ என்று சொல்லியுள்ளார்.

அதற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள், 'மத்திய அரசின் கோபத்தைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. நாம் திட்டமிட்டபடி மே முதல் நாளை அரசு விடுமுறையாக அறிவிப்போம்’ என்று சொல்லியதோடு, அதன்படியே 1967 மே முதல் நாளை விடுமுறை நாளாக தமிழக அரசால் அறிவிக்கச் செய்தார்.

இந்தியாவின் வரலாற்றில் தொழிலாளர்களின் உரிமைப் போருக்கு உயர்வு தந்து, மே தினத்துக்கு விடுமுறை அறிவித்த பெருமை பேரறிஞர் அண்ணா அவர்களுக்கே உரித்தானது.

No comments:

Post a Comment