Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Saturday, 16 May 2020

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் இயற்கை எய்தினார்.




ஆசிரிய இயக்கங்களுக்கு ஒரு பேரிழப்பு . ஆசிரியர்களின் மூத்த முன்னோடி- வழிகாட்டி . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் . ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் . முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர் . உயர்திரு பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் . தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் .






கண்ணீரால் கவிதை அஞ்சலி!

தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர்.பாவலர்.
க.மீனாட்சி சுந்தரம்.
அவர்களுக்காகா!

தலைஞாயிறு தந்த தலைமகனே!
கலைஞர் வளர்த்த திருமகனே!

ஆசிரியர்களுக்காகவே வாழ்ந்த காவலனே!

கணக்கில் அடங்கா கனைகள் தொடுத்த மாவீரனே?

ஆசிரியர்களை மன்றத்தின் மறவர்களே!
மறத்தியர்களே!
என வீரத்தாய் பால் ஊட்டி வளர்த்த எங்கள் (மதுரை) மீனாட்சியே!

எங்களின் உள்ளத்தையும்,
இல்லத்தையும் அறிவாற்றால் அங்கிகரித்து அலங்கரித்த
(மீனாட்சி) சுந்தரரே!

இனி எங்களுக்காக கேள்வி கேட்கவும் வேள்வி செய்யவும் யார் உள்ளார் காளனே!
பதில் கூறு?

             கேட்பவன்,
            தமிழ் நாடு    தொடக்கப்பள்ளி   ஆசிரியர் மன்றம்.
கிருட்டினகிரி ஒன்றியச் செயலாளர்.
திரு.ரா.நாராயணசாமி

No comments:

Post a Comment