Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Saturday, 22 August 2020

பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று தான் வாகனத்தில் ஊர்வலம் வந்த போது...

 

பில் கிளிண்டன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று தான் வாகனத்தில் ஊர்வலம் வந்த போது முன் இருக்கையில் அவரின் மனைவி ஹிலாரி கிளிண்டன் அமர்ந்திருந்தாராம்.. பில் கிளிண்டன் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாராம்... வாகனம் திடீரென நின்று விட்டது காரணம் பெட்ரோல் இல்லை.. உடனே அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஒருவர் பெட்ரோல் போடுகிறார். பெட்ரோல் போட்டு முடித்தவுடன் அந்த பெட்ரோல் போட்ட ஊழியர் காரின் கண்ணாடியை தட்டி முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஹிலாரி கிளிண்டனிடம் ஹிலாரி How are you என்று கேட்க பதிலுக்கு ஹிலாரியும் I'm fine என்று சொன்னாராம்!

                    கண்ணாடி ஏற்றப்பட்டு வாகனம் புறப்பட்டது. பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பில்கிளிண்டன் ஆச்சரியத்துடன் தன் மனைவி ஹிலாரியை பார்த்து கேட்டாராம் ஹிலாரி நீ ஒரு அமெரிக்க அதிபரின் மனைவி மற்றும் வெள்ளை மாளிகையில் குடியேறப் போகும் அதிஷ்டசாலி.. இந்த சாதாரன பெட்ரோல் பங் ஊழியர் உனக்கு எப்படி தெரியும் என்றவாறு.. அதற்கு ஹிலாரி கிளிண்டன் சொன்னாராம் ஓ... அதுவா அவன் என்னுடைய கிளாஸ் மெட் அவன் பெயர் அலெக்சாண்டர். அவன்  நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளியில் நன்றாக படிப்பவன் அது மட்டுமல்ல என்னை அதிகமாக நேசிப்பவன் என்ன செய்ய காலத்தின் சூழ்நிலை அவன் பெட்ரோல் பங்கில் வேலை செய்கிறான்... என்றார்.. வாகனம் போய் கொண்டே இருக்கிறது!

                       பில்கிளிண்டன் ஹிலாரியிடம் கிண்டலாக ஒரு வேளை உன்னை அதிகமாக நேசித்த  அவனை நீ நேசித்து திருமணம் செய்து இருந்தால் இன்றைக்கு பெட்ரோல் பங் ஊழியரின் மனைவியாக இருந்திருப்பாய்,  அப்படித் தானே ஹிலாரி என்றாராம்... அதற்கு ஹிலாரி சொன்னாராம், "அப்படி அல்ல மிஸ்டர் பில் கிளிண்டன்! அந்த அலெக்சாண்டர் அமெரிக்க அதிபராக இருந்திருப்பான்! நீர் பெட்ரோல் பங் ஊழியராக இருந்திருப்பீர்" என்றாராம்!

                          நண்பர்களே பல நேரங்களில் மனைவியின் திறமைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம்! ஆனால் நாம் கெத்தோடும் சத்தோடும் வாழ்வது நம் துணையினால் தான் என்பதை மறந்து விடக்கூடாது! 

No comments:

Post a Comment