Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Thursday, 1 October 2020

இஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்..

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.


"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும் "


இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.


"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."


" நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்


நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு " அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே" என்று அலறினார் இவர்.


" வெரி குட் .இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது ..500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "


உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.


ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.


" டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க " என்றார்.


" நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீர் டாக்டர்.


" அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே " என்று அலறினார் இவர்..


" வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க " 


இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார் .


" எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்"


" சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர் 


"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.


" வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய் " 


பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்...

No comments:

Post a Comment