Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Friday, 16 April 2021

இந்து தேஷ் என்றால் என்ன?

இந்துத்வம் என்றால் என்ன..???

இறைவன் சிவ பரம்பொருளின் அன்புக்குரிய மக்கள் வாழும் நாடு இந்து நாடு. இந்து என்றால் சந்திரன். பரமேஸ்வரனை  இந்து சேகரன் என்றும் இந்து சிகாமணி என்றும் அழைப்பர். அவர் பெயராலேயே இந்த நிலப்பரப்பு இந்துதேஷ் ஆனது. இந்து தேஷ் என்ற சொல் பைபிளில் எஸ்தர் புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிமு 350  ஆண்டு வாக்கில் சந்திரகுப்த மௌரியர் ஆட்சிகாலத்தில் வந்த மெகஸ்தனிஸ்  என்ற ஐரோப்பிய பிரயாணி இந்தியாவை இந்துதேஷ் என்று குறிப்பிட்டுள்ளார்.

🌻சமஸ்கிருதத்தில் ஜம்புத்வீபம் எனவும் தமிழில் 🌻நாவலந்தீவு (குமரிக் கண்டம்) என்றும் வழங்கப்பட்ட தமிழர்களின் பெரு நிலப்பரப்பு கடல் கொண்டபின் தப்பிப் பிழைத்த மக்கள் வடக்கே சிந்து நதி தீரம் காந்தாரம் வரை பரவி உலகின் தொல் நாகரிகத்தையும் பண்பாட்டையும் தழைக்கச் செய்தனர்...இந்து என்றால் சந்திரனை தலையில் சூடிய இந்துசேகரன் என்ற சிவம்.

இமயம் முதல் பிந்து சாஹரம் எனப்பட்ட இந்துமாக்கடல் வரை பரந்து விரிந்த இறைவனால் நிர்மாணிக்கப்பட்ட இப்பெரு நிலம் இந்துஸ்தானம் என வழங்கப்படுகிறது.

அதாவது ஹிந்து என்ற வார்த்தை  ஐயாயிரம்  ஆண்டுகளுக்கு முந்தைய பிருகஹஸ்பதீய  சாஸ்திரம், பவிஷ்ய புராணம், காலிகா புராணம்,  கல்பத்ரும், மாதவ திக்விஜயம், பாரிஜாத நாடகம், சப்த கோஷங்கள் ஆகிய நூற்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1இமாலயம் சமாரப்ய யாவதிந்து சரோவரம்! 

தம் தேவ நிர்மிதம் தேசம் இந்துஸ்தானம் பிரக்ஷதே! !

பொருள்: இமயம் முதல் குமரிவரை கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஹந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.

என்கிறது உலகின் தொன்மையான ரிக்கு வேதத்தின் பிருஹஸ்பதி ஆஹமம்.... த்தில்

இந்துஸ்தானம்  என குறிப்பிடப்பட்டுள்ளது.

2 ஹிம்சயா தூயதே யஸ்ச ஸதாசரண தத்பர:

வேத., கோ ப்ரதிமா ஸேகி ஸ ஹிந்து முவர்ணபாக்.

புத்தஸ்மிருதி 

பொருள்; யார் ஹிம்ஸிக்கபட்டாலும் துக்கமடைகிறானோ ஒழுக்க வாழ்க்கை நடத்துவதில் முனைப்புடன்உள்ளானோ வேதம் மற்றும் இறைவனை விக்ரக வடிவில் பக்தியுடன் வழிபடுகிறவன் ஹிந்து ஆவான்.

3 ஹிமாலயாத் ஸமாராப்ய யாவத் இந்து ஸரோவரம் 

தத் தேவ நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரக்ஷத.

ப்ருஹஸபத்ய ஆகமம்

பொருள்: ஹிமாலயம் முதல ஹிந்து மஹசாகரம் வரை  விரிந்து  கிடக்கும் சிவபெருமானால்   நிர்மாணிக்கப்பட்ட இந்த தேசம் ஹிந்துஸ்தானம் என அழைக்கப்பட்டது.

4 ஜானுஸ்தானே  ஜைன ஸப்த சிந்துஸ் ததைவ ச: ஹப்த ஹிந்துர்யாவனிய  புனர்ஞேய குருண்டிகா:

பலிஷ்யபுராணம்

பொருள்: ஸப்த ஹிந்து என்ற வாக்கியம் ஹிந்துவாக மாறியது.

5 கலினா பலினா  கலிதகலௌ தூம்தர்மா

யவனையோ  ரதர்மாக்ராஜ்தா ஹிந்துவோ விந்த்ய மாவிஹன !!

காலிகாபுராணம்

பொருள். அதர்ம படையெடுப்பளர்களை விரட்டி வாழ்பவர்கள் இந்துக்கள்.

ஆங்கிலேயர்களால் இந்தியா என  ஆங்கிலேயர்களால் அழைத்தனர்.பழைய காலங்களில் வெளிநாட்டினர் இந்த அகண்ட இந்துஷ்தான் மக்களை  இந்து என்றே அழைத்தனர். பைளில் எஸ்தர் புஸ்தகத்தில் இஸ்ரேலிய அரச  முடி சூட்ட விழாவில் இந்து தேச அரசர்கள் பங்கேற்றதாக குறிப்பு உள்ளது 

இந்துஸ்தானத்தின் தன்மை இந்து தன்மை என்றும்.

🌻மொழிகள், சமயங்கள்-வழிபாட்டு முறைகள் தட்ப வெப்பம், அரசியல் பிரிவுகள் போன்ற வேற்றுமைகள் நிறைந்திருந்தாலும் இந்துஸ்தானத்தைப் பிணைக்கும் ஒருமைப்பாட்டு சக்தியாக திகழ்வது தர்மம்-அறம் என்பதேயாம்...

அதுவே இந்துஸ்தானத்தின் அடிப்படைக் கூறு-தன்மை அதாவது🌹 இந்துத்வம்🌹...

மொழிகள் மாறுபட்டாலும் சிந்தனை ஒன்று  தான்...

🌻தர்ம, அர்த காம மோக்ஷ என்றாலும் அறம், பொருள் , இன்பம், வீடு என தேசம் முழுவதும் வாழ்வைக் குறித்த பார்வை புரிதல் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது...

🌻பொருளீட்டுவதாயினும் இன்பம் துய்ப்பதாயினும் அறம் அடிப்படையாக இருக்க வேண்டும்..

🌻அவ்வாறு அறம் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்குமானால் வீடுபேறு தானே கிட்டும் என்பதே இந்த தேசம் உலகிற்கு வழங்கும் செய்தி. இந்து என்பது சந்திரன். சந்திரனைச்சூடிய சிவனை இந்துசேகரன் என்றும் இந்து சிகாமணியென்றும் அழைப்பர்.இதிலிருந்துதான் இந்தியா உருவானது.

அதுவே. படையெடுத்து வந்த துலுக்கர் இந்துதேஷ் என்றே அழைத்தனர்.

🌻🌸இந்துத்வம்🌸🌻....

வாழ்க என் இந்தியா...!!! Indu means God Shiv.

No comments:

Post a Comment