Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Monday, 2 December 2024

உங்கள் திறன்பேசி 'ஹேக்' செய்யப்பட்டால்...


                     சமீபகாலமாக பலரின் கைப்பேசி மற்றும் whatsapp செயலி போன்றவை ஹேக் செய்யப்பட்டுகிறது. இதுபோன்ற தனிநபர்களின் திறன்பேசி 'ஹேக்' செய்யப்படும்போது நம்முடைய தகவல்களை மோசடிக்காரர்கள் திருடக்கூடும்.அதன் வழியாக சட்டத்துக்குப் புறம்பான காரியங்களைச் செய்யக்கூடும்.


         ‌ மின்னஞ்சலுக்கு வரும் 'ஓடிபியை பயன்படுத்தி நம் கணக்கில் உள்ள பணத்தைக்கூட அடித்துவிடுவார்கள். கைபேசியில் உள்ள தரவுகள் மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் ஆகியவை ஹேக்கர்களால் திருடப்படுகிறது என்பதை செய்தித்தாள்களில் செய்திகளாக படித்திருக்கிறோம்.

            ஆனால்  சமீப நாட்களாக நமது ஆசிரியர்கள் சிலரின் கைபேசி மற்றும் whatsapp ஹேக் செய்யப்பட்டது.


இதிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து காண்போம்.


எப்படிக் கண்டறிவது?

1. வழக்கத்துக்கு மாறாக திறன்பேசியில் பேட்டரியின் திறன் வேகமாகக் குறைந்தாலோ, திடீரென திறன்பேசி அதிக சூடாக இருந்தாலோ யாரோ 'ஹேக்' செய்து நம் திறன்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். 

2. நீங்கள் திறன்பேசியை அதிகமாகப் பயன்படுத்தாத நிலையில், மொபைல் டேட்டா வேகமாகக் குறைகிறது என்றாலும், திறன்பேசி 'ஹேக்' செய்யப்பட்டிருக்கலாம்.

3. திறன்பேசியில் பேசிக்கொண்டிருக்கும்போது 'கிராஸ் ஸ்டாக்' போல வித்தியாசமாக உணர்ந்தால், யாரோ நம் திறன்பேசியை ஒட்டுக்கேட்கிறார்கள் அல்லது பதிவுசெய்கிறார்கள் என்று அர்த்தம்.

4. சில நேரம் திறன்பேசியில் மூழ்கியிருக்கும்போது "பாப் அப்' விளம்பரங்கள் அதிகமாகத் தோன்றக்கூடும். குறிப்பாக ஆபாசமான விளம்பரங்கள் பளிச்சிடும். இதுபோன்ற 'பாப்அப்' விளம்பரங்களை 'கிளிக்" செய்தால் அதன் வழியே மால்வேர் பதிவிறக்கம் ஆக வாய்ப்புண்டு.இதன் வழியாகவும் திறன்பேசி ஹேக் செய்யப் படலாம். 


திறன்பேசியில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளில் ஒன்றை எதிர்கொண்டாலும், திறன்பேசி ஹேக் செய்யப்பட்டிருக்குமோ? என்று சந்தேகப்பட வேண்டும்.


எப்படி தப்பிப்பது?

இதிலிருந்து தப்பிக்க, 

1. முதலில் உங்களுக்குத் தெரியாமல் திறன்பேசியில் ஏதாவது செயலி பதிவிறக்கம் ஆகியிருக்கிறதா என்று ஆராய வேண்டும். உங்களுக்குத் தெரியாமலோ, வேறு ஏதாவது இணையதளத்தில் இருக்கும்போது தெரியாமல் கைபட்டோ அல்லது வீட்டில் குழந்தைகள் குழந்தைகள் வீடியோ வீடியோ கேம்ஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கோ செயலியைப் பதிவிறக்கம் செய்திருக்கலாம். அதில் திறன்பேசியை அணுக எல்லையில்லா அனுமதியைக் வழங்கியிருக்கக்கூடும். ஒரு திறன்பேசியை வாங்கும்போதே இருந்த செயலிகள் என்றாலும்கூட, அந்தச் செயலிகளைக் கவனமாக ஆராய வேண்டும். தேவையில்லாத செயலிகள் என்றால் நீக்கிவிட வேண்டும். உங்கள் திறன்பேசியில் இதுவரை பார்த்திராத செயலி இருந்தால், அது பிரச்சினைக்குரியதாக இருக்கக்கூடும். அதை டெலிட் செய்துவிட வேண்டும். 

2. திறன்பேசியில் ஆராய்ந்தும் எதையும் கண்டறிய முடியாவிட்டால், எந்தெந்தச் செயலிகள் பேட்டரி திறனில் பெரும் பகுதியையும் அதிகப்படியான டேட்டாவையும் விழுங்குகின்றன என்பதை 'செட்டிங்'கில் சென்று பார்வையிடுங்கள். அதன்மூலமும் 'ஹேக்கிங்'கிற்கு காரணமான செயலியைக் கண்டறியலாம். 

3. இப்படியெல்லாம் செய்தும்கூட சந்தேகம் தீரவில்லை என்றால், உங்கள் திறன்பேசியை ரீசெட் செய்துவிடுங்கள். அதற்கு முன்பாக உங்கள் திறன்பேசியில் உள்ள 'டேட்டா'வை 'காப்பி' செய்துகொள்ளுங்கள். 'ரீசெட்" செய்யும்போது நமக்கே தெரியாமல் திறன்பேசியில் ஏதேனும் பதிவிறக்கம் ஆகியிருந்தால், அவை தானாக 'டெலிட்' ஆகிவிடும். அதன்பிறகு மீண்டும் திறன்பேசியை இயக்கும்போது எல்லாவற்றுக்கும் 'பாஸ் கோட்' கொடுத்துப் பயன்படுத்துங்கள். 

4. குறிப்பாக வாட்ஸ் அப். எஸ்.எம்.எஸ். வழியாக வரும் எந்த 'லிங்கு'களையும் 'கிளிக்' செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment

MBBS ONLINE APPLY - 2025

MBBS ONLINE APPLY - 2025