அரசாணை 148 P & AR Dt 31/10/2018 அனைத்து குழுக்களில் பகிரப்பட்டது
FR 26 (a) ruling 13 (ix) திருத்தம் சார்ந்த தகவல்
குழுக்களில் பகிரப்பட்ட தகவல் 👇
🌹Retirment Date -க்கும் Increment Date -க்கும் இடையில் காலாண்டு (மூன்று மாதம்) இருப்பின் ஓர் ஊதிய உயர்வு வழங்க அனுமதிக்கும் அரசாணை🌹
குழுக்களில் அந்த அரசாணை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது...
உண்மையான விளக்கம்...
இதற்கு அரசு கடிதம் 784/ FR P & AR Dept Dated 4.9.2019 இல் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....
அதாவது....
ஓய்வு பெற இருக்கும் ஒருவர் கடைசி ஆண்டில் பதவி உயர்வு பெற்றார் எனில்...
ஓராண்டு நிறைவு செய்வதற்கு முன் ஓய்வு/இறப்பு நிகழ்ந்தாலும் அந்த கால ஆண்டிற்கு முதல் நாளில் ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம்...
எடுத்துக்காட்டாக ...
ஒருவர் 14/6/24 இல் பதவி உயர்வு பெறுகிறார்...
13/6/25 இல் தான் பதவி உயர்வு பெற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது...
ஆனால் அவரின் பணி ஓய்வு 30/4/25...
ஓராண்டு நிறைவிற்குள் அவர் ஓய்வு பெற்றார்...
இருப்பினும் June month
1/4 quater இல் வருகிறது...
எனவே அவருக்கு அந்த காலாண்டின் முதல் நாள் 1/4/25 இல் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம் ....
இது தான் அரசாணை மற்றும் அதன் விளக்கம்...
விளக்க கடிதத்தில் எடுத்துக் காட்டுடன் தெளிவாக விளக்கி உள்ளார்கள் 👍
குழுக்களில் வலம் வருவது போல...
மே மாதம் ஒருவர் ஓய்வு..
அவருக்கு வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு 1/7 எனில்
ஓய்வு பெறும் ஆண்டில் 1/7 அன்று ஓர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்க இயலாது .....
இந்த இடத்தில் மற்றொரு அரசாணையினை குறிப்பிடுகிறேன்
அரசாணை எண் 311 நிதி துறை நாள் 31/12/2014...
இது என்னவெனில் வயது முதிர்வு காரணமாக ஒய்வு பெறுகிறார்கள்..
ஓய்வு பெற்றதற்கு அடுத்த நாள் அன்னாரின் ஆண்டு ஊதிய உயர்வு நாள் எனில்...
அவர் ஓய்விற்கு பிறகு " ஓய்வூதிய பலன்களை " பெரும் நோக்கில் அவருக்கு ஓர் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கலாம்...
அதாவது
31 மார்ச் 24 இல் ஓய்வு
அவரின் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு நாள் 1/4 எனில் அவருக்கு retirement benefits க்கு 1/4/24 இல் ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம் ..
அதே போல்
30/6/24 ஓய்வு - 1/7 regular increment எனில்
30/9/24 ஓய்வு - 1/10 regular increment எனில்
31/12/24 ஓய்வு - 1/1
Regular increment எனில்
Retirement benefits க்கு அந்த ஓர் ஊதிய உயர்வு வழங்கலாம்...
அரசாணைகள்/ விளக்க கடிதம் இணைத்துள்ளேன்
No comments:
Post a Comment