தமிழக அரசின் 2025ஆம் ஆண்டிறகான நிதிநிலை அறிக்கை தற்போது தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவால் காலை 9:30 முதல் அறிவிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது
ஏற்கெனவே, தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் மீது பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகள் உள்ளன. தற்போதைய திமுக ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் இதுதான். அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் என்பதால் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும்.
முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்
தற்போது தமிழக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து காண்போம்
பள்ளிகளுக்கான அறிவிப்பு
முதல்வரின் காலை உணவுத் திட்டத்துக்கு பின்னர் பள்ளிகளில் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. ரூ.3,796 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் நிலுவையில் வைத்துள்ளது.
மாணவர், ஆசிரியர்களின் நலன் கருதி மாநில அரசே நிதியை விடுவித்துள்ளது. தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து முக்கிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரு.1,000 கோடி ஒதுக்கீடு.
ரூ.50 கோடியில் 500 அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி குறித்து விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் சுமார் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம். அதற்காக ரு.600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ரூ.65 கோடியில், 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் தரம் உயர்வு! ரூ.56 கோடியில், 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்வு!
ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு
நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும்
புதிய தங்கும் விடுதிகள்
ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் 800 பணிபுரியும் பெண்கள் பயனடையும் வகையில் தோழி விடுதிகள்!
சென்னை, கோவை, மதுரையில் தலா 1,000 மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.275 கோடியில் மாணவியர் விடுதிகள்!
வேளச்சேரியில் புதிய பாலம்! ரூ.310 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். இதன் மூலம் 7 இலட்சம் பேர் பயனடைவார்கள்.
தகவல் தொழில்நுட்ப நகரம்
சென்னைக்கு அருகே புதிய நகரம் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்
இந்த நகரத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும்
குடிநீர் திட்டங்களுக்காக ரூ.26628 கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.29,465 கோடி ஒதுக்கீடு
1 Min Read
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
சட்டப் பேரவையில் பட்ஜெட் தாக்கல் தொடர்பான நேரலையை பார்க்க சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் என மொத்தம் 936 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
நிதிநிலை அறிக்கை தாக்கல் நிகழ்வு முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அந்த கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுப்பது போன்றவைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
நாளை மார்ச் 15-ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். தொடர்ந்து மார்ச் 17-ஆம் தேதி முதல் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கவுள்ளது. மூன்று அல்லது நான்கு நாட்கள் நடைபெறும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு நிதி அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் பதில் அளிப்பார்கள்.
இந்த நிகழ்வில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் சரண் விடுப்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பும், தொகையை உயர்த்துவதற்கான அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
கடந்த ஆண்டு கலைஞரின் கனவு இல்லம் எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் வீடுகள் கட்டும் பணி அனைத்து மாவட்டத்திலும் விரைவாக நடந்து வருகிறது. 2025-26-ம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.
.3,500 கோடியில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
தகவல் தொழில்நுட்ப நகரம்
சென்னைக்கு அருகே புதிய நகரம் 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்
இந்த நகரத்தில் அனைத்து வசதிகளும் இருக்கும்
9:54 AM, 14 Mar 2025 (IST)
குடிநீர் திட்டங்களுக்காக ரூ.26628 கோடி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சியில் ரூ.200 கோடியில் சாலை வசதி
மதுரை மாநகராட்சியில் ரூ.120 கோடியில் சாலை வசதி
சென்னை வேளச்சேரி - கிண்டி குருநானக் கல்லூரி வரை 3 கிமீ தூரத்திற்கு ரூ.310 கோடியில் மேம்பாலம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.3450 கோடி ஒதுக்கீடு
தாம்பரம் அருகே திடக்கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
அடையாறு நதியை மேம்படுத்தி அழகுபடுத்த ரூ.1500 கோடியில் தனியார் பங்களிப்புடன் புதிய திட்டம்
சென்னை கொருக்குப்பேட்டையில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும்
ரூ.675 கோடியில் புதிதாக 102 புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
புதுக்கோட்டை அறந்தாங்கியில் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ. 1820 கோடியில் செயல்படுத்தப்படும்
மயிலாடுதுறையில் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ. 2200 கோடியில் செயல்படுத்தப்படும்
கடையநல்லூரில் ரூ.864 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்
தமிழ்மொழி வளர்ச்சி
திருக்குறளை மேலும் 45 உலக மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு
மேலும் 500 மிகச் சிறந்த மொழிகளை மொழிபெயர்க்க நடவடிக்கை
500 வெளிநாட்டு மொழிகளை தமிழில் பதிபாக்கம் செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு
பழைய ஓலைச் சுவடிகள் மற்றும் கையெழுத்து பிரதிகளை பதிபாக்க ரூ. 2 கோடி
டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருவனந்தபுரம், சிங்கப்பூர், கோலாலம்பூரில் தமிழ் புத்தக கண்காட்சி நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
குடிநீர் திட்டங்களுக்காக ரூ.26628 கோடி ஒதுக்கீடு
ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.29,465 கோடி ஒதுக்கீடு
2025-2026-ல் ரூ.3500 கோடியில் 1 வீடுகள் கட்டித் தரப்படும்.
சாலை பராமரிப்புக்காக ரூ.120 கோடி விடுவிக்கப்படும்
ஊரகப் பகுதிகளில் உள்ள விளிம்புநிலை மக்களுக்காக புதிய வீடுகள் கட்டித் தரப்படும். 25000 புதிய வீடுகள் ரூ.600 கோடியில் கட்டித் தரப்படும்
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தை 2329 கிராமங்களில் செயல்படுத்த ரூ.1087 கோடி ஒதுக்கீடு
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ஒன்றிய அரசு இதுவரை ரூ.3896 நிலுவை வைத்துள்ளது.
ஊரக வளர்ச்சித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.29,465 கோடி ஒதுக்கீடு
தமிழ் பண்பாட்டுத் துறைக்கான அறிவிப்பு
தமிழ் நிலப்பரப்பில் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயன்பாடு இருந்தது என்று அறிவிக்கப்பட்டது
இரும்பின் தொன்மை, பழந்தமிழரின் தொழில்நுட்பம் குறித்து வெளிநாட்டு அறிஞர்கள் பாராட்டு
இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்து தான் தொடங்கியது
2025-2026-ல் கீழடி, கரிவலம்வந்தநல்லூர், நாகை, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளப்படும்
தொல்லியல் துறையில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ள ரூ.7 கோடி ஒதுக்கீடு
No comments:
Post a Comment