Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Tuesday, 25 March 2025

உச்சத்தை தொடவிருக்கும் கோடைகாலம்! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! மார்ச் 27 முதல் கவனம் தேவை!

கடல் சார்ந்த அலைவுகள் சாதகமற்ற நிலையில் காணப்படுவதாலும், காற்றின் போக்கில் நிலவும் வேகமாறுபாடு மற்றும் வறண்ட கிழக்கு காற்றின் வருகை காரணமாக மார்ச் 27ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலான 5 நாட்கள் தமிழகத்தில் வெப்பம் தீவிரமடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது


குறிப்பாக 1. வேலூர் 2. திருப்பத்தூர், 3. தர்மபுரி, 4. கள்ளக்குறிச்சி, 5. திருச்சி, 6.கரூர், 7. மதுரை, 8. ஈரோடு, 9. சேலம், 10. விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மார்ச் 27 முதல் 31 வரையிலான 5 நாட்கள் வெப்பநிலை 39 முதல் 41°© செல்சியஸ் வரை (அதாவது 104° Fahrenheit மேலாக)  நிலவும் என எதிர்ப்பார்கப்படுகிறது.


அதேசமயத்தில் 1. திருவள்ளூர் 2. இராணிப்பேட்டை 3. திருவண்ணாமலை 4. விழுப்புரம் 5. அரியலூர் 6. பெரம்பலூர் 7. நாமக்கல் 8. தஞ்சாவூர் 9. திருவாரூர் 10. புதுக்கோட்டை 11. சிவகங்கை 12. திருநெல்வேலி உள்ளிட்ட மாவடங்களில் வெப்பநிலை 37-39°© செல்சியஸ் அளவில் நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


1. சென்னை 2. செங்கல்பட்டு 3. கடலூர் 4. மயிலாடுதுறை 5. நாகப்பட்டினம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 35 முதல் 37°© அளவில் காணப்படும்.


இதன் காரணமாக பொதுமக்கள் மார்ச் 27,28,29,30,31 ஆகிய ஐந்து தினங்களுக்கு வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, கரூர், மதுரை, ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்ட மக்கள் கீழ்காணும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கபடுகிறது.


1. முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும்,


2. வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள் நீர்சத்துடைய பழங்கள், நீர் எடுத்துக்கொள்ளவும்,


3. வேளாண்மை சார்ந்த பணிகளில் காலை/மாலை மட்டும் ஈடுபடுமாறும்,


4. வெட்ட வெளியில் பணிகளில் ஈடுப்பட வேண்டாம் என்றும், 


5. இருசக்கர வாகனங்களில் தொலைதூர பயணங்களை தவிர்க்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அதிக வெப்பநிலை மற்றும் ஈர்ப்பதம் காரணமாக மக்களுக்கு திடிரென அசௌவுகரியம் ஏற்படக்கூடும்.


என்றும் இயற்கையுடன்

டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்

No comments:

Post a Comment

🌸 முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிய மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் 🌸

  பயனாளிகள் : 👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவச தரிசன நேரங்கள் : ⏰ காலை – 10:00 மணி ⏰ பிற்பகல் – 3:00 மணி எப்படி உள்ள...