Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Tuesday, 11 March 2025

மாசிமகம்...! புனித நீராடல்... சிவபெருமானை வழிபாடு செய்யுங்கள்.!!

மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம். மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். எல்லா மாதங்களிலும் 'மகம்" நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன. 


மாசிமக நன்னாளில், நம்மால் முடிந்த அன்னதானம் அல்லது பொருள்தானம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால், வாழ்வில் சத்விஷயங்கள் நம்மை வந்தடையும். மனதில் இருந்த குழப்பமும், பயமும் நீங்கும். மங்கல காரியங்கள் இனிதே நடந்தேறும். இந்த வருடம் மாசிமகம் மாசி 28ஆம் தேதி (12.03.2025) புதன் கிழமையன்று வருகிறது.


பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும். 


மாசிமகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். மாசிமகம் ஸ்நானம் செய்வோருக்கு சிவபெருமான் உரிய பலன் தருவார். 

மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசிமக புராணத்தை படிக்கலாம் அல்லது கேட்கலாம், அதுவும் புண்ணியமே. 

நீராடும்போது ஒருமுறை நீராடி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை நீராடி எழுந்தால் தேவலோகத்தில் வீற்றிருக்கும் பெருமை கிடைக்கும். மூன்றாம் முறை நீராடி எழுந்தால் நீராடுபவர் செய்த புண்ணியத்திற்கு எல்லையே இல்லை. 

நீராடும் காலத்துச் சிவபுராணம் சொல்லுதல் மேலும் பிறப்பை அறுக்கும் பாக்கியத்தை பெறுவர்


பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது. எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசிமகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.


இந்நாளில் விரதம் இருந்து கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடினால் ஆதிகும்பேஸ்வரரை தரிசித்தால் சகல தோஷங்களும் நீங்கும்.🙏🏻🙏🏻🙏🏻

No comments:

Post a Comment

🌸 முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிய மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் 🌸

  பயனாளிகள் : 👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவச தரிசன நேரங்கள் : ⏰ காலை – 10:00 மணி ⏰ பிற்பகல் – 3:00 மணி எப்படி உள்ள...