தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தருமபுரி பிரிவு சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீச்சல் பழகுதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் முதற்கட்ட நீச்சல் பயிற்சி முகாம் 01.04.2025 முதல் 13.04.2025 வரையிலும், இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம், 15.04.2025 முதல் 27.04.2025 வரையிலும், மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் 29.04.2025 முதல் 11.05.2025 வரையிலும், நான்காம் கட்ட 13.05.2025 முதல் 25.05.2025 வரையிலும், ஐந்தாம் கட்ட நீச்சல் பயிற்சி முகாம் 27.05.2025 முதல் 08.06.2025 வரையிலும் இராஜாஜி நீச்சல்குளம், தருமபுரியில் நடைபெறவுள்ளது.
காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை, காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை மாணவர்கள் மற்றும் ஆண்களுக்கும், காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை மாணவிகள் மற்றும் பெண்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். நீச்சல் பயிற்சி கட்டணமாக ரூ.1770/- இணைய வழி வாயிலாகவோ, POS இயந்திரம் வாயிலாகவோ செலுத்துதல் வேண்டும். இதற்கான விண்ணப்பத்தினை நீச்சல்குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, பயன்பெறலாம்.
இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment