பண்டிகை முன்பணம் வரவில்லையா அல்லது பண்டிகை முன் பணம் கிடைக்க தாமதமாகின்றதா - சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது ?
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அலுவலகத்தில் வழங்கப்படுகின்ற விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகள் காலதாமதமாகின்றதா - சங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது?
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
அலுவலர்கள் அதிகாரப் போக்குடன் நடந்து கொள்கிறார்களா - சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
ஆட்சியாளர்கள் தொடர் அடக்கு முறையின் மூலம் மன உளைச்சலை உண்டாக்குகின்றார்களா - சங்கம் என்ன செய்து கொண்டிருக்கின்றது ?
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அரசாணை மேல் அரசாணைகள் போட்டு நம்முடைய உரிமைகள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறதா - சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது?
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அரசு கொடுத்த வாக்குறுதி காப்பாற்றவில்லையா? உரிமைகள் பறிக்கப்படுகிறதா? சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது ?சங்கம் என்பது யார் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் சங்கம், அவரவர் வீட்டிலே சொந்த வேலையை பார்த்துக் கொண்டு வாட்ஸ் அப்பில் சங்க தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வீர வசனமாக பதிவிட்டு விட்டு எல்லாம் கிடைத்துவிடும் என்றால் எப்படி கிடைக்கும், இது என்ன மனநிலை என்று யோசித்து பாருங்கள்,
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அனைத்திற்கும் சங்கத்தை நோக்கி கேள்வி கேட்கும் அன்பான உறவுகளே.....*
வட்டாரத்தில் சங்க நிகழ்வுகளுக்காக சிறிதுநேரம் ஒதுக்க கூறினால் எங்களுக்கு வேலை இருக்கிறது என்கிறீர்கள்....
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
மாலை நேர போராட்டத்தில் கலந்து கொள்ள கூறினால் வேலை இருக்கிறது என்கிறீர்கள்.....
🔥🔥🔥🔥🚩🚩🚩🚩
வேலை நாட்களில் போராட்டம் நடத்தினால் விடுமுறையா பார்த்து வைக்க கூடாதா என்கிறீர்கள்.....
🚩🚩🚩🚩🔥🔥🔥🔥
விடுமுறை நாளில் போராட்டம் நடத்தினால் கிடைக்கிறதே இரண்டு நாள் தான் அதிலுமா! என்கிறீர்கள்....
🚩🚩🚩🚩🔥🔥🔥🔥
ஆண்டின் தொடக்கத்தில் போராட்டம் நடத்தினால் வருஷம் ஆரம்பத்திலேயே எப்படி லீவு போடுவது என்கிறீர்கள்......
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆண்டின் இறுதியில் போராட்டத்திற்கு அழைத்தால் வருஷ கடைசி ஆயிடுச்சே எப்படிப்பா லீவு இருக்கும் என்கிறீர்கள்.
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
சங்கம் வேறு நாம் வேறு அல்ல. நாம் அனைவரும் இணைந்தால் தானே சங்கம்.இங்கே பொறுப்பாளர்களும் நாம்தாம். உறுப்பினர்களும் நாம்தாம் .போராட்டங்களும் நமக்காகத்தான் நாம் அனைவரும் களத்தில் இருந்தால் நம்முடைய கோரிக்கைகள் அனைத்தும் ஒரே நாளில் கேட்கப்பட்டு விடும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒன்றுபடுவோம்!
போராடுவோம்!!இறுதி வெற்றி நமதே!!!
அனைவரும் களம் நோக்கி வாருங்கள்
நாள்: 23.03.2025 ஞாயிறு இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தர்மபுரி
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
உங்கள் அனைவரையும் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஜாக்டோ ஜியோ
தர்மபுரி மாவட்டம்
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
No comments:
Post a Comment