Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Thursday, 5 February 2026

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகராட்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் வழித்தடம்.

தருமபுரி  மாவட்டத்தில்   தருமபுரி நகராட்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட உள்ளது தொடர்பாக  தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்களால் வெளியிடப்படும்  பத்திரிக்கைசெய்தி


 தருமபுரி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் 05.02.2026 அன்று திறக்கப்பட உள்ளது. அது சமயம் தற்போது உள்ள பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து அரசு மற்றும் தனியார் புறநகர் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல வேண்டும். நகரப் பேருந்துகள், தனியார் சிற்றுந்துகள், தற்போது உள்ள நகரப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும்.


 திருப்பத்தூர், திருவண்ணாமலை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் மார்க்கமாக தருமபுரி நோக்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் தற்போது இயக்கப்பட்டு வரும் வழித்தடமான மதிகோண்பாளையம் வந்து நான்கு ரோடு, குமாராசாமிப்பேட்டை வழியாக பென்னாகரம் மேம்பாலம் சந்திப்பு, பென்னாகரம் சாலையில் உள்ள நுழைவாயில் வழியாக புதிய புறநகர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

 கிருஷ்ணகிரி மார்க்கத்திலிருந்து தருமபுரி நோக்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் NH44 நான்கு வழி சாலையில் A.ரெட்டிஅள்ளி இணைப்பு சாலையை பயன்படுத்தி பென்னாகரம் சாலையில் உள்ள நுழைவாயில் வழியாக புதிய புறநகர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

 பாலக்கோடு மார்க்கத்திலிருந்து NH844 சாலை வழியாக தருமபுரி நோக்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் சோகத்தூர் கூட்டுரோட்டில் உள்ள இணைப்பு சாலையை பயன்படுத்தி பென்னாகரம் சாலையில் உள்ள நுழைவாயில் வழியாக புதிய புறநகர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

 பென்னாகரம் மார்க்கத்திலிருந்து தருமபுரி நோக்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் பென்னாகரம் சாலையில் உள்ள நுழைவாயில் வழியாக புதிய புறநகர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

 மேற்குறிப்பிட்ட மார்க்கத்தில் இருந்து தருமபுரி புறநகர் பேருந்து நிலையம் வந்தடையும் பேருந்துகள் அதே மார்க்கமாகவே திரும்பி செல்ல வேண்டும்.

 சேலம் மார்க்கத்திலிருந்து தருமபுரி நோக்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் தற்போது இயக்கப்பட்டு வரும் வழித்தடமான சேசம்பட்டி, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, ஒட்டப்பட்டி, அவ்வை வழி, கக்கஞ்சிபுரம், தடங்கம் மேம்பாலம்,  NH44ல் உள்ள நுழைவாயில் வழியாக புதிய புறநகர் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். திரும்பி செல்லும் போது பென்னாகரம் மேம்பாலம், குமாரசாமிபேட்டை, நான்கு ரோடு, அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, சேசம்பட்டி வழியாக சேலம் செல்ல வேண்டும்.

 அனைத்து தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் தருமபுரி நான்கு ரோடு வரை தற்போது உள்ள கட்டணத்தை மட்டுமே பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். புதிய பேருந்து நிலையம் செல்லும் பயணிகளிடம் தேசிய நெடுஞ்சாலை துறை வழங்கியுள்ள தூரச்சான்றின்படி, சாதாரண கட்டணப் பேருந்துகளுக்கு ரூ.3 கூடுதல் கட்டணமாகவும், விரைவுப் பேருந்துகளுக்கு ரூ.4 கூடுதல் கட்டணமாகவும் பயணிகளிடம் வசூலிக்க வேண்டும். 

 புதிய பேருந்து நிலையம் மார்க்கமாக அனுமதிச்சீட்டு பெற்றுள்ள அரசு நகரப் பேருந்துகளும், தனியார் சிற்றுந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் தங்களுக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கி உடனடியாக செல்ல வேண்டும்.

 புதிய பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ             ரிக்க்ஷாகளில் அரசு நிர்ணியித்துள்ள கட்டணங்கள் மட்டுமே பயணிகளிடம் வசூலிக்கப்பட வேண்டும்.

 மேற்கண்ட நடைமுறைகள் அனைத்தும் 05.02.2026 முதல் சோதனை அடிப்படையில் 30 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும்.  மேற்கண்ட நடைமுறைகளில் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகள் ஏதேனும் இருப்பின் கீழ்கண்ட முகவரிக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 முகவரி.

வட்டார போக்குவரத்து அலுவலர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்,

தருமபுரி – 636 705

வாட்ஸ் அப் எண். 93848 08242

E-Mail id-rtotn29@nic.com

 இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment