Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Monday, 25 May 2026

இந்தியாவிற்கு திரும்பிய 1000 ஆண்டு கால வரலாற்று பொக்கிஷம்.


பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட சோழர் கால செப்பேடு.


பிரதமர் மோதி அரசு முறை பயணமாக நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.


பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது நெதர்லாந்து நாட்டில் உள்ள Leiden பல்கலைக்கழகத்தில் சுமார் 300 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் 11ம் நூற்றாண்டை சேர்ந்த "ஆனமங்கலம்" சோழர் கால செப்பேடு ஒப்படைக்கப்பட்டுள்ளது.


நெதர்லாந்து நாட்டினுடைய பிரதமர் ராப் ஜெட்டன் இந்த செப்பேடுகளை பிரதமர் மோதியிடம் ஒப்படைத்தார்.


ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த இந்த வரலாற்றுப் பொக்கிஷங்கள், நாகப்பட்டினத்தில் இருந்த புத்த விகாரத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கொடை பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளன.


இந்தச் செப்பேடுகள் முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகன் முதலாம் ராஜேந்திர சோழன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டவை.


நாகப்பட்டினத்தில் இருந்த 'சூளாமணி விகாரம்' என்ற பௌத்தக் கோயிலுக்கு, ஆனைமங்கலம் கிராமத்தின் வருவாய் முழுவதும் தானமாக வழங்கப்பட்டதை இந்தச் செப்பேடுகள் பதிவு செய்துள்ளன.


மொத்தம் 21 செப்பேடுகள் பெரிய வெண்கல கம்பியால் ஒன்றாக இணைக்கப்பட்டு, ராஜேந்திர சோழனின் முத்திரையைக் கொண்டுள்ளன.


இவற்றில் 5 ஏடுகள் சமஸ்கிருத மொழியிலும் (கிரந்த எழுத்து), 16 ஏடுகள் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.


18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தச் செப்பேடுகள் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குக் கொண்டு செல்லப்பட்டன. கடந்த 300 ஆண்டுகளாக நெதர்லாந்தின் லெய்டன் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.


இந்த செப்பேடு ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் தனது கைப்பட அவரது முத்திரையை விட்டு வழங்கிய செப்பேடு.


இந்த முத்திரையில் 


ராஜத் ராஜன்ய மகுட ஷ்ரேணி ரத்னேஷு ஷாஸநம் ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய பரகேசரி வர்ம்மண 


என்று பொறிக்கப்பட்டுள்ளது.


இண்டொனேஷியாவை ஆட்சி செய்த மன்னன் "சூளாமணி வர்மண்" என்ற மன்னனின் வேண்டுகோளை ஏற்று நாகப்பட்டினத்தில் "புத்த மடாலயம்" அமைப்பதற்காக நாகப்பட்டினத்தில் உள்ள "ஆனமங்கலா" என்ற கிராமத்தில் இருக்கும் சுமார் 642 ஏக்கர் நிலத்தை ராஜ ராஜ சோழன் தானமாக வழங்கி சாசனம் செய்து கொடுத்தது தான் இந்த செப்பேடு.


இந்த செப்பேடு மொத்தமொத்தம் சுமார் 30 கிலோ எடை கொண்டது


இப்படிப்பட்ட 1000 ஆண்டு கால வரலாற்று பொக்கிஷம் 300 ஆண்டுகளுக்குப் பிறகு நெதர்லாந்து நாட்டிடம் இருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது...


No comments:

Post a Comment