Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Sunday, 17 May 2026

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கை அறிவிப்பு

நாகப்பட்டினம் - 611 002


2026-2027 கல்வியாண்டின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு


2026-27 ஆம் கல்வியாண்டின் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான [B.F.Sc., (இளநிலை மீன்வள அறிவியல்), B.Tech. (மீன்வளப் பொறியியல்), B.Tech. (உயிர் தொழில்நுட்பவியல்), B.Tech. (உணவுத் தொழில்நுட்பவியல்), BBA (மீன்வள வணிக மேலாண்மை), B.Voc. courses (தொழில்சார் பட்டப்படிப்புகள்] சேர்க்கைக்கு மாணவர்களிடமிருந்து 15.05.2026 காலை 11:00 மணி முதல் 14.06.2026 மாலை 06.00 மணி வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் (Online applications) வரவேற்கப்படுகின்றன.


மேலும் இணையதள விண்ணப்ப வழிமுறைகள், தகவல் தொகுப்பேடு, சேர்க்கைத் தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விவரங்களை [வழிமுறைகள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு (7.5%), மாற்றுத் திறனாளி மாணவர்கள் (5%), மீனவ சமுதாய மாணவர்கள் (5% & 15%), மற்ற மாநில மாணவர்கள் (Other State Quota) / அயல்நாடு வாழ் இந்தியர் (NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் குழந்தைகள் (Wards of NRIs) / அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோர் (NRI Sponsored), அயல்நாட்டினர் (Foreign Nationals)  https://www.admission.tnjfu.ac.in/அறிந்து கொள்ளலாம்.


இணையதள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

No comments:

Post a Comment