Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Sunday, 17 May 2026

தமிழர்_வாழ்வியலில் பயன்பாட்டில் இருந்த #மண்பானை வகைகளும் அதன் #பயன்களும்..

1. #அஃகப்பானை – (தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை)  


2. அஃகுப்பானை – வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.


3. #அகட்டுப்பானை – நடுவிடம் பருத்த பானை


4. அடிசிற்பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.


5. #அடுக்குப்பானை – நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.


6. அரசாணிப்பானை – திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.


7. #உசும்பியபானை – உயரம் மிகுந்த பானை.


8. உறிப்பானை – உறியில் வைத்தற்கு ஏற்ற பானை


9. #எஃகுப்பானை – இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை


10. எழுத்துப்பானை – எழுத்துகள் வரையப் பெற்ற பானை


11. #எழுப்புப்பானை – உயரம் வாய்ந்த பானை


12. ஒறுவாயப்பானை – விளிம்பு சிதைந்த பானை


13. #ஓதப்பானை – ஈரப் பானை


14. ஓர்மப்பானை – திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை


15. #ஓரிப்பானை – தனிப் பானை, ஒல்லியான பானை


16. ஓவியப்பானை – ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை


17. #கஞ்சிப்பானை – கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை


18. கட்டப்பானை – அடிப்பகுதி வனையப்படாத பானை


19. #கட்டுப்பானை – மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )


20. கதிர்ப்பானை – புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை


21. #கரகப்பானை – கரவப்பானை – நீர்க்கரகம்


22. கரிப்பானை – கரி பிடித்த பானை


23. #கருப்புப்பானை – முழுவதுமாகக் 

கருநிளம் வாய்ந்த பானை


24. கருப்பு – சிவப்புபானை – உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை


25. #கலசப்பானை – கலயம், கலசம், கலம், நீர்க்கலம்


26. கழுநீர்ப்பானை – அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)


27. #காடிப்பானை – கழுநீர்ப் பானை


28. காதுப்பானை – விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை


29. #குண்டுப்பானை – உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை


30. குறைப் பானை – அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)


31. #கூடைப்பானை – கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை


32. கூர்முனை பானை – அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை


33. கூர்ப் பானை – கூர் முனைப் பானை


34. #கூழ்ப்பானை – கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை


35. கோளப் பானை – உருண்டு திரண்ட பானை


36. சருவப் பானை – மேற்புறம் அகற்சியாகவும் – கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.


37. #சவப்பானை – சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி


38. சவலைப் பானை – நன்கு வேகாத பானை, மெல்லிய பானை


39. சன்னப் பானை – மெல்லிய பானை, கனமில்லாத பானை


40. சாம்பல் பானை – கையால் செய்யப் பெற்ற பானை


41. சொண்டுப் பானை – கனத்த விளிம்புடைய பானை


42. #சோற்றுப்பானை – சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை


43. சில்லுப் பானை – மிகச் சிறிய பானை


44. சின்ன பானை – சிறிய பானை


45. #தவலைப்பானை – சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)


46. திடமப் பானை – பெரிய பானை (திடுமுப் பானை)


47. திம்மப் பானை – பெரும்பானை (திம்மம் – பருமம்)


48. துந்திப் பானை – தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை


49. தொண்ணைப் பானை – குழிவார்ந்த பானை


50. தோரணப் பானை – கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை


51. #தோள்பானை – தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை


52. நாற்கால் பானை – நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை


53. பச்சைப் பானை – சுடப்பெறாத பானை


54. படரப்பானை – அகற்ற – பெரிய பானை


55. பிணப் பானை – சவப்பானை, ஈமத்தாழி


56. பொள்ளற் பானை – துளையுள்ள பானை (பொள்ளல் பானை)


57. பொங்கல் பானை – பொங்கல் விழாவிற்குரிய பானை


58. #மங்கலக்கூலப்பானை – திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை


59. மடைக்கலப் பானை – திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை


60. மிண்டப் பானை – பெரிய பானை


61. மிறைப் பானை – வளைந்து உயர்ந்த பானை


62. முகந்தெழு பானை – ஏற்றப் பா


63. முடலைப் பானை – உருண்டையுருவப் பானை


64. #முரகுப்பானை – பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)


65. மொங்கம் பானை – பெரும் பானை (மொங்கான் பானை)


66. மொட்டைப் பானை – கழுத்தில்லாத பானை


67. #வடிநீர்ப்பானை – நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்


68. வழைப் பானை – வழவழப்பான புதுப்பானை


69. #வெள்ளாவிப்பானை – துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை.

No comments:

Post a Comment