Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Tuesday, 7 July 2026

ஆசிரியர் தகுதித் தேர்வா? ஆசிரியர்களை சிறுமைப்படுத்தும் தேர்வா?

அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருந்த ஆசிரியர்களுக்கு இன்று ஆசிரியர் தகுதி தேர்வு என்று வைத்து ஆசிரியர்களை தகுதி இல்லாதவர்களாக காட்டும் அளவிற்கு நமது ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்று அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களை உருவாக்கியவர்கள் நமது ஆசிரியர்கள் என்பதை மறந்து விட்டு ஆசிரியர்களின் மீது உளவியல் தாக்குதல் நடத்துகின்றனர்.25- 35ஆண்டு காலம் ஆசிரியர்களாக பணி செய்து பல்வேறு துறை வல்லுனர்களை உருவாக்கிய நமது ஆசிரியர் பெருமக்களுக்கு இந்த தகுதித் தேர்வு என்பது தேவையற்ற ஒன்று. நம்மை பணியில் நியமிக்கும் போது அரசு வகுத்த நெறிமுறைகள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில்தான் பணியமர்த்தப்பட்டோம். எந்த ஆசிரியரும் குறுக்கு வழியில் பணியில் சேரவில்லை.ஆசிரியர் தேர்வு வாரிய வல்லுநர்கள் 25- 35 ஆண்டுகளுக்கு முன் உள்ள கல்வி உளவியல் பற்றிய வினாக்களையும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளி கல்லூரி பாடங்களில் இருந்து IAS க்கு கேள்வி எடுப்பது போல வினாக்கள் எடுப்பதும் 3 மணி நேர தேர்விற்கு வினாக்களை படிப்பதற்கே ஒரு மணி நேரம் எடுத்துக் கொள்ளும் அளவிற்கு மிகவும் சிக்கலான வினாக்களை கேட்டு அனைத்து ஆசிரியர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியும் துறை மீது மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தும் வண்ணமாக இந்த ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளது ஆசிரியர்களின் வெறுப்பானது பள்ளிக்கல்வித்துறை மீது மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசின் மீதும் ஆசிரியர்கள் வெறுப்பை கொட்டும் அளவிற்கு இந்த தகுதி தேர்வு அமைந்துள்ளது. ஆசிரியர்களால் அமைக்கப்பட்ட இந்த நல்லாட்சிக்கு பங்கம் விளைவிற்கும் வண்ணமும் நல் ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தற்போதைய அரசுக்கு எதிராக ஆசிரியர்களை திசை திருப்பும் வண்ணமும் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு நடந்துள்ளது. நமது தற்போதைய ஆட்சிக்கும் இந்த தகுதி தேர்வுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதைப் போன்ற தேர்வை அரசின் அனைத்து துறைகளிலும் நடத்தினால் அவர்கள் அனைவரும் தகுதி ஆகி விடுவார்களா? அல்லது தேர்வில் தேர்வு பெற்று விடுவார்களா? இந்த தேர்வுக்கான வினாத்தாளை தயாரித்தவர்கள் மூன்று மணி நேரத்தில் இந்த தேர்வை எழுதி 150 மதிப்பெண்கள் பெறுவார்களா? ஆசிரியர்கள் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம்  புகுத்தப்படுகிறது தங்களை உருவாக்கியவர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவா? தங்களை உருவாக்கி உயர் பதவியில் அலங்கரித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவா? ஆசிரியர்கள் மட்டுமே இந்த சமுதாயத்தில் தன்னைவிட தன்னிடம் படித்தவர்கள் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் என்ற உயரிய குணம் கொண்டவர்கள். அவர்கள் தகுதி இல்லாமல உங்களை உருவாக்கினார்கள் தகுதி இல்லாத ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட நீங்கள் எப்படி அந்த பதவிக்கு தகுதியானவர்களாக ஆனீர்கள்? ஆசிரியர் பணி நாடுனர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வை  விட ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கான தகுதி தேர்வு மிக மிக கடுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வினாவை சுமார் 90 வினாடிகளில் படித்து சிந்தித்து பயிற்சி செய்து விடை அளிக்கும்படி வினா வடிவமைக்கப்பட்டுள்ளது ஒரு வினா ஒரு பக்க அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது 150 வினாக்களுக்கு 180 நிமிடங்களில் விடை அளிக்க முடியுமா? இந்த வினாத்தாளை தயாரித்தவர்கள் எந்த அடிப்படை உளவியலோடு ஒப்பிட்டு இந்த வினாத்தாளை வடிவமைத்துள்ளார்கள்? 25 -35 ஆண்டுகாலம் ஆசிரியர் பணியில் அனுபவம் பெற்று இன்று 57 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வா? அல்லது ஆசிரியர்களை அரசுக்கு எதிராக திருப்பி விடும் தேர்வா?ஆசிரியர்களுக்கு இந்த அளவு உள தாக்குதலை கொடுத்த உங்களை உருவாக்கியவர்கள் யார்? NCERT கைவிட்டாயிற்று ,ஆறுதல் தர வேண்டிய TRB யுமா இந்த கடினமான கேள்விகளை கேட்கிற சூழலை ஏற்படுத்தி ஆசிரியர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கியுள்ளது, இதற்கு முந்தைய ஆட்சியில் 5 வருடமாக Tet பிரச்சினையை கண்டுகொள்ளாமல் தெரியாமல் நடந்தது போல தற்போதாவது விழிப்புடன் இந்த நிலைமைகளை தற்போதைய முதலமைச்சர் கவனிக்க வேண்டுகிறோம்.**

  தற்போது உருவாக்கப்பட்ட நமது அரசு, ஆசிரியர்களை பாதுகாக்கும் வண்ணம் இந்த தகுதி தேர்வின் மீது கவனம் செலுத்தி ஒட்டுமொத்த ஆசிரியர்களும் தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 35 மதிப்பெண்ணாக   மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணி அனுபவத்திற்கு ஒரு மதிப்பெண் என்ற வீதத்தில் வெய்ட்டேஜ் மதிப்பெண் கொடுக்க வேண்டும். தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களில் ஆசிரியர்கள் காப்பற்றப்பட்டுள்ளனர் அவர்களுக்கு பதவி உயர்வு பாதிப்பு தமிழ்நாடை போல ஏற்படவில்லை . களிந்த ஆட்சியில் பணபலன்களும் முறையாக வழங்கப்படவில்லை. பதவி உயர்வும் 4 வருடமாக வழங்கபடவில்லை. Tet தான் என ஆக்கிவிட்டார்கள். எதற்கு Spl Test என பெயரிட்டனர், எதாவது பயன் உண்டா ? மற்ற மாநிலங்களை போல ஆசிரியர்களை பாதுகாத்திருக்கலாம், அதைவிடுத்து கடினமாக கேள்வி வேற கேட்டு அவர்கள் கற்பிக்கும் பாடத்திலாவது கேள்வி கேட்க கூடாதா? எனவே ஆசிரியர்கள் கற்பிக்கும் வகுப்பு பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்ட வினாக்களுக்கு மதிப்பெண்கள் வழங்கிட வேண்டும்.


 இவ்வாறு Tet தாள்- 1 க்கு 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு பாடங்கள் என்றும் Tet தாள் 2 -விற்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை பாடம் என்று தான் உள்ளது. மத்திய அரசு NCERT யும் குறிப்பிடுகிறது. அதை மாற்றி 6 முதல் ‌ பத்தாம் வகுப்பு வரை யென Tet -2 விற்கு தமிழ்நாட்டில் மாட்டும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் எடுப்பவர்களுக்கு Tet வேண்டாம் என இலவச கட்டாய கல்வி 14 வயதுக்குட்பட்டவர்கள் என (NCERT ) குறிப்பிட்டும் நடைமுறைபடுத்தாது பாவம் ஒரு பக்கம்  பழி ஒரு பக்கம் என்பது போல உள்ளது. 


கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் ஆசிரியர்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டு பன்றி மைய கோட்பாடு என்ற ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கி நமது கோரிக்கைகள் எல்லாம் நீர்த்துப் போகும் வண்ணம் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார்கள். அந்த வகையில் இந்த தகுதி தேர்வு ஆசிரியர்கள் மீது மறைமுகமான தாக்குதலாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த தகுதி தேர்வுக்கு தற்போதைய  அரசுக்கும் சம்பந்தமில்லை என்றாலும்  அரசு ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட ஆசிரியர் தகுதி தேர்வின் மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் 35 மதிப்பெண்ணாக குறைக்க வேண்டும் எனவும், முறையாக Syllabus Std I to 5, VI to VIII தவிர கேட்கபட்ட கேள்விகள் பற்றி அடுத்த தேர்வுகளில் தெளிவுபடுத்தவும் அதைமுறைபடுத்தவும் நீதிமன்றத்தில் முறையிடுகிற நிலைக்கு நாம் தள்ளபட்டுள்ளோம். முக்கியமாக பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வை முற்றிலும் கைவிட  நீதிமன்ற மூலமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு மாநில அரசு வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைத்து ஆசிரியர்களையும் பாதுகாக்கும் விதமாக உச்சநீதிமன்ற நடைமுறை 3 வருடம் என கொடுக்கபட்ட கால கெடுவுக்குள்ளால் Tet யை  ஆசிரியர்கள் முடித்தால் போதும் என்ற சிறப்பு அனுமதியை மத்திய அரசிடம் பெறுவதற்கு சட்டமன்றத்தில் முயற்சி எடுத்து, வேலை போய்விடுமோ என்ற அதிர்ச்சியோடு அமர்ந்திருக்கிற ஆசிரியர்களையும், பதவி உயர்வு கனவில் ஓய்வு பெற விருக்கிற சீனியர் ஆசிரியர்களையும் காப்பாற்றுமா இந்த அரசு என்ற ஏக்கத்துடனும் விரக்தியுடனும் தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்து ஏங்கும் தமிழ்நாடு ஆசிரியர்கள் பாவம்.இதுவும் கடந்து போகும். நன்றி.

TNPBTTA

மாநில அமைப்பு

No comments:

Post a Comment