Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Sunday, 23 February 2020

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான், பனையை விதைத்தவன் பார்த்துவிட்டு சாவான் -பழமொழியின் உண்மையான விளக்கம்

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள் பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.ஆனால் இதிலுள்ள உண்மை என்னவெனில்…

தென்னையை_விதைப்பவன், அது குறுகிய காலத்தில் வளர்ந்து குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் சிரட்டை, கீற்று, பிஞ்சு, நார் மற்றும் தென்னம்பாளை, தென்னங்கல், கொப்பரை, எண்ணெய், மரசாமான்கள் என பல பொருட்களின் நன்மைகளை கொண்ட உணவுப் பொருட்களைத் தின்று அனுபவித்துவிட்டு வயதாகி சாவான் என்பதே உண்மை….

பனையை_விதைப்பவனோ, முதலில் விளைவிக்கும் தலைமுறை பனையின் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க இயலாது என்பதே உண்மை…மேலும் அது வளர பல ஆண்டுகள் ஆகும் எனவே பார்த்துவிட்டு சாவான் என்பது கிராமத்து பழமொழி…

பனையை விதைத்தவரின் அடுத்த சந்ததியருக்கு பனைக்குருத்து, பனையோலை, நுங்கு, பதநீர், பனம்பழம், பணங்கூழ், பனைஎண்ணை,பங்கல்கண்டு, பனஞ்சர்க்கரை, கருப்பட்டி மற்றும் மரசாமான்கள் என பல நற்பலன்களை அள்ளித்தருவதோடு நாட்டு மருத்ததுவத்திற்கு பெரும்பங்கினை அளிக்கவல்லது என்பதே உண்மை…

இப்பழமொழியின் உண்மையரியாமல்…

தென்னை விதைப்பவன் தேங்காயை உண்பதினால் அதிக கொழுப்பு சேர்ந்து நோய்கள் பீடித்து இறந்துபோவான் என்பதும் வதந்தியே…

பனையை விதைப்பவன் மரம் வளருவதனை பார்த்துக்கொண்டே இறப்பான் என்பதும் வதந்தியே…

குறிப்பு:

இரண்டு மரங்களுமே மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் வரங்கள்..!!!!

ஆதலினால் பயந்தரக்கூடிய இதனை போன்ற மரங்களை அதிகளவில் நடுவோம்!!!

மனிதகுலத்தினை_காப்போம்.

No comments:

Post a Comment