Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 25 March 2020

அரசியல் முரண்பாடுகள், கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள், கட்சிப் பிரிவினைகள் உள்ளிட்ட எதையும் பேசுவதற்கோ, விமர்சிப்பதற்கோ இது நேரமல்ல.




நம்மனைவரின் முன்னிருக்கும் பொதுவான பிரச்சனை கொரோனா மட்டுமே.

அனைவரும் இதயத்தால்  ஒன்றிணைந்து... இல்லத்தில் தனித்திருந்து அத்தகு நோய்நுண்மியை அழிப்பது மட்டுமே ஒற்றை இலக்கு.

இந்த நேரத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவது மட்டுமே நம் அனைவரின் கடமையாகும்.

எதிர்ப்புகளைக் காட்டவும், மாற்றுக் கருத்துகளை எடுத்துக் கூறவும் வேண்டுமெனில் அதற்கு முதலில் நாம் உயிருடன் இருக்க வேண்டும் அல்லவா...

அதனால் இத்தனை  நாள்கள் நம்முடைய  அன்றாட நடைமுறை வாழ்வில் இருந்ததைப் போலின்றி தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை, வசதி குறைவுகளை, சங்கடங்களை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

அரசின் ஆணைப்படி அனைவரும் நடப்போம்...
அழிவுதரும் கொரோனாவை முற்றிலுமாகத் துடைப்போம்...

~ தகடூர் ப.அறிவொளி.

No comments:

Post a Comment