Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Saturday, 16 May 2020

பள்ளிக்கல்வித்துறை பணியாளர்களுக்கும் வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலைநாள் திட்டம் அமல் - இயக்குநர் உத்தரவு.


இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) செயல்முறைகள் , சென்னை -600006

ந.க.எண் .001002 / 02 / இ 2 / 2020

நாள் 15.05.2020

பொருள் பணியமைப்பு- கொரானா வைரஸ் ( Corono Virus ) ஊரடங்கு அரசால் 18.05.2020 முதல் வாரத்துக்கு ஆறு வேலைநாட்கள் அறிவிக்கப்பட்டமை -50 % பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிதல் - சார்பு .

பார்வை அரசாணை ( நிலை ) எண் .239 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் .15.05.2020 . =

==== கோரானா வைரஸ் தொற்று காரணமாக அரசால் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட பிறகு தற்போது நடைமுறைகள் அரசால் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து அரசு அலுவலகங்கள் செயல்படுவது குறித்து பார்வையிற்காண் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .

அதனடிப்படையில் 18.05.2020 முதல் வாரத்துக்கு ஆறு வேலைநாட்கள் ( சனிக்கிழமை உட்பட ) அரசு அலுவலகங்கள் பணியாற்ற வேண்டும் , எனவும் , 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதனால் பள்ளிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து வகை பணியாளர்களும் 18.05.2020 முதல் சுழற்சி முறையில் அலுவலகப் பணிக்கு வருகை தரவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது .

தனிநபர் இடைவெளியை பின்பற்றிட ஏதுவாக ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டிய பணியாளர்கள் குறித்து 18.05.2020 அன்று உரிய அறிவுரைகள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது .

No comments:

Post a Comment