Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Wednesday, 20 May 2020

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மிஞ்சிய வண்டலூர் புதிய பேருந்து நிலையம்.. அசர வைக்கும் புதிய வரைபடம் வெளியானது.!





வண்டலூர் அருகே ரூ.309 கோடியில் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தின் முழு வரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் புது புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கடந்த 2013-ல் ஆண்டு தமிழக அரசு திட்டமிட்டது.

இந்த பேருந்து நிலையம் சுமார் 88.52 ஏக்கரில் நிலப்பரப்பில் ரூ. 309 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் 7.4 ஏக்கரில் 13 பிளாட்பார்ம்களுடன் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது

82 மாநகர பேருந்துகள் ஒரே நேரத்தில் வந்து செல்லும் வகையில் 13 பிளாட்பாரங்கள் அமைக்கப்படுகின்றன.

மேலும் 1100 கார்களும் 2798 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் அமைகிறது. தென்மாவட்டங்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக 2,700 அரசு விரைவு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தினமும் 75 ஆயிரம் பயணிகள் வந்து செல்லும் வகையில் வசதிகள் செய்யப்பட உள்ளது.

பயணிகள் தங்களின் உடமைகளை எளிதாக எடுத்துச் செல்வதற்காக நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளன.

மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, முதலுதவி மையம், மருந்தகம், டிரைவர்கள்-கண்டக்டர்களுக்கான ஓய்வு அறை, பயணிகள் காத்திருப்பு அறை, குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ளன. ஆட்டோ, கால் டாக்சி வாகனங்கள் நிறுத்தவும் தனியாக இடவசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், வண்டலூரில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்தின் வரைப்படம் வெளியாகியுள்ளது

No comments:

Post a Comment