Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Tuesday, 21 July 2020

படிவம் 26AS-ல் மாற்றம்! இனி வருமான வரித் தாக்கல் சுலபம்


தற்போதைய ‘26ஏஎஸ்’ படிவம், வரி செலுத்துவோர் தங்களின் அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளையும் நினைவுகூற உதவும் வகையில் சிறப்பு நிதி பரிவர்த்தனை அறிக்கைகளைக் கொண்டிருக்கும்


படிவம் 26AS-ல் மாற்றம்! இனி வருமான வரித் தாக்கல் சுலபம்‘26 ஏஎஸ்’ என்ற படிவம், மேம்படுத்தப்பட்டு, புதிய படிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

New Form 26AS: வருமான வரி செலுத்துவோர், கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தும் வகையில், ‘26 ஏஎஸ்’ என்ற படிவம், மேம்படுத்தப்பட்டு புதிய படிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரி வாரியத்தின் ஆணையர் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் (ஊடகம் மற்றும் தொழில்நுட்ப கொள்கை) சுராபி அலுவாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருமான வரி செலுத்துவோர், கணக்கு தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தும் வகையில், ‘26 ஏஎஸ்’ என்ற படிவம், மேம்படுத்தப்பட்டு, புதிய படிவமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், வருமான வரி கணக்கு தாக்கலை, முகமறியாமலும், விரைவாகவும், சரியாகவும், மின்னணு முறையில், தாக்கல் செய்ய முடியும். நடப்பு மதிப்பீட்டு ஆண்டிலிருந்து, மேம்பட்ட படிவம் 26 ஏஎஸ் படிவத்தை, வரி செலுத்துவோர் பயன்படுத்தலாம். இது வரி செலுத்துவோரின், நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான, சில கூடுதல் விவரங்களை பதிவிடும் வகையில், பல்வேறு பிரிவுகளில், சிறப்பு நிதி பரிவர்த்தனை அறிக்கையில் (எஸ் எப்.டி) குறிப்பிடப்பட்டுள்ளது.

படிவம் 26AS என்றால் என்ன, அது எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

இந்த குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனை அறிக்கைகள் வாயிலாக, கணக்கு தாக்கல் செய்வோரிடமிருந்து பெறப்படும் தகவல்கள், தற்போது, படிவம் ‘26 ஏஎஸ்’ஸில் இணைக்கப்பட்டுள்ளன. இது தன்னார்வ உடன்பாடு, வரி பொறுப்புடைமை, மற்றும் மின்னணு மூலம் தாக்கல் செய்யும் முறை (இ-பைலிங்) போன்றவை இதன் வாயிலாக எளிமையாகிறது.

ஆரோக்கியமான சூழலில், சரியான வரிப் பொறுப்பைக் கணக்கிடுவதன் மூலம் வரி செலுத்துவோர் அல்லது அவரது வருமான வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்) தாக்கல் இந்த படிவத்தை பயன்படுத்தலாம். இது, வரி நிர்வாகத்தில் மேலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை கொண்டுவரும்.

முந்தைய ‘26 ஏஎஸ்’ படிவத்தில் பிடித்தம் செய்யப்படும் வரி மற்றும் ஒரு பான் கார்டு வாயிலாக சேகரிக்கப்பட்ட வரி தொடர்பான தகவல்களை வழங்க பயன்படுகிறது. மேலும், செலுத்தப்பட்ட பிற வரி விவரங்கள், பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் டி.டி.எஸ். இயல்புநிலை உள்ளிட்ட சில கூடுதல் தகவல்களையும் பெற முடியும். ஆனால், தற்போதைய ‘26ஏஎஸ்’ படிவம், வரி செலுத்துவோர் தங்களின் அனைத்து முக்கிய நிதி பரிவர்த்தனைகளையும் நினைவுகூற உதவும் வகையில் சிறப்பு நிதி பரிவர்த்தனை அறிக்கைகளைக் கொண்டிருக்கும்.



No comments:

Post a Comment

MBBS ONLINE APPLY - 2025

MBBS ONLINE APPLY - 2025