அனைவருக்கும் வணக்கம், 1995 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றி நிறைவு செய்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்,மேலும் 25 ஆண்டுகள் சிறப்பாக பணி முடித்த அனைவரும் அரசு வழங்கும் பரிசுத்தொகை ரூ 2000/ஐ ( ரூபாய் இரண்டாயிரம் மட்டில்) பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். எனவே நீங்கள் அனைவரும் ஒரு விண்ணப்பம் எழுதி அந்தந்த தலைமையாசியர் மூலமாக உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கவும். முதன்மைக் கல்வி அலுவலகத்தில் Allottment ஒதுக்கி அந்தந்த தலைமையாசிரியருக்கு உத்தரவு வரும் வந்ததும் கருவூலத்துக்கு பில்லை அனுப்பி உங்களுக்கு தலைமையாசிரியர் பெற்றுக் கொடுப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மீண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவண், நல்லாசிரியர், ஆ.வ. அண்ணாமலை, மாநில சிறப்புத் தலைவர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், விழுப்புரம் கைபேசி எண் 94436 19586
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்கக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின் படி ஆரணி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2019 - 2020 ஆம் நிதியாண்டில் பல்வேறு இனங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு ஆணை பெறப்பட்டுள்ளது . இந்நிதி ஒதுக்கீட்டில் இருந்து 2202 - 02 - 109AA என்ற கணக்கு தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 25 ஆண்டுகள் மாசற்ற சிறப்பக பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களுக்கு பரிசுகளும் வெகுமதியும் என்ற நுண் கனக்குத்தலைப்பில் சிறப்பு வெகுமதித் தொகை ரூ . 2000 / - வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
எனவே தங்கள் பள்ளியில் 25 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள் இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் 21 . 02 . 2020 அன்று மாலை 5 . 00 மணிக்குள் இவ்வலுவலக அ2 பிரிவில் ஒப்படைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .
25 Year Job Completed Reward Form - Download here

No comments:
Post a Comment