நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுக துக்கங்களுக்கு,
நல்லவை கெட்டவைகளுக்கு,
ஜாதக கட்டங்களும்,
அதில் அமர்ந்திருக்கும் நவகிரகங்களும் தான் காரணம் என்று சொல்கிறது ஜோதிடம்.
இருப்பினும்,
சில பேருக்கு ஜாதக கட்டத்தில் எந்த தோஷமும் இல்லை.
எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனாலும், கிரகங்களின் அனுகிரக பார்வை கிடைக்கவில்லையே!
அது எதனால்?
நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில கட்டங்களில்,
கஷ்டப் படுவதற்கு என்ன காரணம்,
என்ற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால்,
நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவார்கள்!
இது கூடவா,
ஒரு காரணம் என்ற அளவிற்கு உங்களையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்,
அந்த காரணம் என்ன?
தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?
என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
🙏🤝🙏
#எவர்ஒருவர்தங்களுடையசொந்த
#பந்தங்களைமதிக்காமல்அலட்சியமாக #மரியாதைகுறைவாகநடத்துகிறார்களோ,
#அவர்களுக்குநவகிரகத்தின் #ஆசீர்வாதமும்அனுக்கிஹமும்
#கட்டாயம்கிடைக்கவேகிடைக்காது.
இப்படியாக சொன்னால்
நீங்கள் நம்புவீர்களா?
நம்ப மாட்டீங்கன்னு தெரியும்.
சாட்சியோடு சொன்னா நம்புவீங்களானு பாப்போம்?
#எந்தகிரகத்துக்குரியசொந்தபந்தம்
#எதுஎன்பதையும்பார்த்துவிடலாம்.
👇👇👇👇👇👇
#உங்களுடையஅப்பாவைநீங்கள் #மரியாதையாகநடத்தவில்லைஎன்றால்,
#அப்பாவிற்குகொடுக்கவேண்டியஸ்தானத்தைஅவருக்குநீங்கள்கொடுக்கவில்லைஎன்றால்,
உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.
வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.
ஏனென்றால்,
அப்பா ஸ்தாணத்தை குறிப்பது சூரியன்.
#உங்களுடையஅம்மாவைநீங்கள்மதிக்கவில்லைஎன்றால்,
#அவர்களைமரியாதைகுறைவாகநடத்தினால்,
#அவர்களைஅவமானப்படுத்திபேசினால்,
கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும்.
அறிவாற்றல் மங்கிப் போகும்.
குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள்.
மனநிம்மதியே இருக்காது.
ஏனென்றால்,
#அம்மாஸ்தானத்தைகுறிப்பது
#சந்திரபகவான்.
நீங்கள் கணவனாக இருந்தால்,
உங்கள் வீட்டில் இருக்கும் மனைவியை மரியாதையோடு தான் நடத்த வேண்டும்.
மனைவிக்கு மரியாதை இல்லை என்றால்,
உங்கள் வீட்டில் மகாலட்சுமி இல்லை.
வீடு, மனை, வாகனம், சொத்துபத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால்,
மனைவிக்கு மரியாதை கொடுக்க
வேண்டும்.
#மனைவிஇடத்தைகுறிப்பதுசுக்கிரன்.
நீங்கள் மனைவியாக இருந்தால்
உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும்.
#உங்கள்கணவர்இடத்தைகுறிப்பதுகுரு.
உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ,
சந்தோஷம் நிலைத்திருக்க கட்டாயம் மனைவிமார்கள்,
கணவனை மதிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
#தாய்மாமன்ஸ்தானத்தைகுறிப்பவர்புதன்தாய்மாமன்மட்டுமல்ல,
#அத்தைஸ்தானத்தையும்குறிப்பதும்புதன்பகவான்.
உங்களது குழந்தைகள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால், தாய்மாமன்,
அத்தை போன்ற சொந்த பந்தங்களை மதிப்போடு நடத்த வேண்டும்.
சகோதர சகோதரிகளை இழிவாகப் பேசினால்,
#செவ்வாய்பகவானின்அனுக்கிரகம்கிடைக்காது.
உங்களால் ஆடம்பர பொருட்களை வாங்கி, நிலம் வீடு போன்ற சொத்துக்களை வாங்கி,
கட்டாயம் சேர்க்க முடியாதபடி
வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபடும்.
இது உங்களுடைய சகோதர சகோதரிகளுக்கும் பொருந்தும்.
கணவனாக இருந்தால்,
மனைவியின் சகோதரர் சகோதரிகளையும் மதிக்கவேண்டும்.
மனைவியாக இருந்தால் மனைவியின், சகோதர சகோதரியையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக பாட்டிமார்களும் தாத்தாக்களும்.
இவர்கள் இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது சொல்வதற்கு ஆளே கிடையாது.
அதாவது,
#தாத்தாபாட்டிராகுகேதுவிற்குஉரியவர்கள்இவர்கள்.
ஆகவே, இவர்களை மிகவும் மரியாதையோடு நடத்த வேண்டும்.
முதியவர்களை கஷ்டப்படுத்தினால், நாமும் வாழ்க்கையில் கஷ்டப்பட வேண்டியதுதான்.
இப்போதாவது நம்புவீர்களா கஷ்டம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று!
No comments:
Post a Comment