Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Tuesday, 19 October 2021

தற்காலிக மின் இணைப்புகள் மற்றும் புதிய மின் இணைப்புகள் தேவைப்பட்டால், மின்வாரிய இணையதளத்தில் வீட்டிலிருந்து ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதும். பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் வந்து அலையத் தேவையில்லை. மின்வாரியம் தங்களைத் தேடி தங்கள் இடத்திற்கே வரும்.

✓ TNEB Related 



தற்காலிக மின் இணைப்புகள் மற்றும் புதிய மின் இணைப்புகள் தேவைப்பட்டால், மின்வாரிய இணையதளத்தில் வீட்டிலிருந்து ஆன்லைனில் விண்ணப்பித்தாலே போதும். பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் வந்து அலையத் தேவையில்லை. மின்வாரியம் தங்களைத் தேடி தங்கள் இடத்திற்கே வரும். 


தேவையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும். அந்த ஆவணத்தை Pdf வடிவில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்துவிடலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பம் பரிசீலனை செய்யப்படும். எவ்வளவு தொகை செலுத்தவேண்டும் என்பதையும் மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல் மூலம் மின்வாரியம் தெரிவிக்கும். அந்தத் தொகையையும் ஆன்லைனில் நெட்பேங்கிங் மூலம் விண்ணப்பதாரர் செலுத்திவிடலாம். செலுத்தியத் தொகைக்கு பற்றுச்சீட்டும் (இரசீது) இணையத்தளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இத்துடன் விண்ப்பதாரர் பணி முடிந்துவிடுகிறது. பின்னர், மின்வாரியப் பொறியாளர், இடத்தினை ஆய்வு செய்து, சரியாக இருக்கும்போது, மின் இணைப்பு வழங்கிவிடுவார். விண்ணப்பதாரர் தேவையற்ற அலைச்சலைக் குறைக்கவும், சிரமத்தைத் தவிர்க்கவும் இந்த ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


வேறு எந்தத் தொகையும் யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை. மின்வாரியம் தங்கள் இல்லம் தேடி வந்து மின் இணைப்பு வழங்கும். 


மின் இணைப்பு வழங்குவதற்காக, கம்பம் கொண்டுவருதல், குழி எடுத்தல், கம்பம் நடுதல், மின்கம்பி இழுத்து மின்பாதை அமைத்தல் ஆகிய அனைத்து பணிகளும் மின்வாரியம் சார்ந்தது. மின்வாரியமே செலவுகளை ஏற்கும். இதற்காக, ஆட்களுக்கு கூலி கொடுத்தல், வேலை செய்யும் ஆட்களுக்கு சாப்பாடு மற்றும் தேநீர் வாங்கிக் கொடுத்தல் என எதையுமே பொதுமக்கள் செய்யத் தேவையில்லை. அது தவறானதும் கூட. பணியாளர்களுக்கு மின்வாரியம் ஊதியம் வழங்குகிறது; ஒப்பந்த அடிப்படையில் நடைபெறும் பணிகளுக்கு மின்வாரியம் பணம் செலுத்துகிறது. எனவே, ஒரு ரூபாய் கூட யாருக்கும் தரத்தேவையில்லை. 


மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர்கள், பொதுமக்களிடம் அன்பளிப்பு, தேநீர் மற்றும் உணவு போன்ற எதையுமே பெறமாட்டார்கள்; கொடுக்கவும் தேவையில்லை. 


சாய்ந்த கம்பத்தை நிமிர்த்தி நடுதல், உடைந்த கம்பத்தை மாற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்திக் கட்டுதல், மின்பாதையில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடைகளை சரிசெய்தல் ஆகியன மின்வாரியமே செலவுசெய்து சரிசெய்யும். இத்தகைய பணிகளுக்கும் யாரும் பணம் செலுத்தத்தேவையில்லை! 


இதனையும் மீறி, யாராவது பணம் கேட்டால், 24 மணி நேரமும் பொதுமக்களின் மின்வாரியம் தொடர்பான குறைகளைக் கேட்க  9498794987 என்ற எண் செயல்படுகிறது.  தங்களது குறைகளை இந்த எண்ணிற்குத் தெரிவிக்கவும். 


இலஞ்சம் தொடர்பான புகார்கள் நேரிடையாக மின்வாரியத்தில் இயங்கும்  விஜிலன்ஸ் அலுவலகத்திற்கு சென்றுவிடும். மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்களும் இந்த எண்ணிற்கு வரும் குறைகளைத் தொடர்ந்து ஆய்வு செய்கிறார்கள். 


என்றும் மக்கள் சேவையில், 

"தமிழ்நாடு மின்சார வாரியம்"!!


சிவராமன் அய்யம்பெருமாள்

உ.செ.பொ / நாமக்கல்

No comments:

Post a Comment