Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Saturday, 8 March 2025

கோவில் அர்ச்சனை தட்டில் தேங்காய், வாழைப்பழம், எலுமிச்சை பழம் வைப்பது ஏன் ?


சிந்தியுங்கள் மெய் அன்பர்களே ...


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

     ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶


"இந்து தர்மம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல மனிதனின் வாழ்வியல்"


தமிழ் முன்னோர்கள் எது செய்தாலும் அதில் ஆழமான பல அர்த்தங்கள் நிறைந்து இருக்கும்....


🌳🌳🌴🌴🥥🥥🥥🌴🌴🌳🌳


1 தேங்காய் நற்குணங்கள்:-


தேங்காயின் நற்குணங்கள் ஏராளம். குடலில் உள்ள புண்கள் குணப்படுத்துவதும், உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்டாலை கொடுக்கிறது. எலும்புக்கு தேவையான எண்ணெய் உற்பத்தி செய்வதற்கும், நீண்ட நாள் வாழ்வதற்கு ஏற்ற பொருளாக பயன்படுகிறது.


🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹


உடலில் நமக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும். இறைவனுங்கு படைக்கப்பட்ட பின், அதை வாங்கி கூறு போட்டு நாம் சாப்பிட்டு, மற்றவர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து உண்ண செய்தல் வேண்டும்...


🍏🍎🍇🍌🍌🍌🍌🫐🥭🍑


2 இரண்டாவது வாழைப்பழம் :-


இது மிக சிறந்த பழம். புற்று நோயை கூட குணப்படுத்தும் வல்லமை கொண்டது. குடல், வயிற்றில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்யும் தனித்தன்மை வாய்ந்தது. 


உடலுக்கு உடனடியாக ஆற்றலை கொடுக்கும். இதையும் இறைவனுக்கு படைத்த பின் நானும், சுற்றத்தார், உறவினர், நண்பர்களுக்கு கொடுத்து உண்ண செய்யலாம். அவற்றில் ஊது பத்தி கொளுத்தி வைத்து வீணடிக்க வேண்டாம்...


🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋


3 மூன்றாவது எலுமிச்சை பழம் :-


கனிகளில் தெய்வக் கனி என்று புகழ் பெற்றது எலுமிச்சம்பழம் 


அதுவும் சிறந்த பழம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தண்ணீரில் பிழிந்து உப்பு அல்லது இனிப்பு போட்டு குடிக்கலாம். புத்துணர்ச்சியை கொடுக்கும். சுடுதண்ணீரில் சிறிது எலுமிச்சையை பிழிந்து குடிக்க தேவையில்லாத கழிவுகள் வெளியேறும். கொலஸ்டிரால் குறையும்...

தெய்வீக காரியத்துக்கு மகத்துவம் மற்றும் மருத்துவ ரீதியாக அதிக பலன்கள் இருக்கின்றது...  


☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️


4 நான்காவது வெற்றிலை :-


வெற்றிலை மிக மிக சிறந்த மருத்துவ பொருள். உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.  வைரஸ் தடுக்கக்கூடியது. அதனால் நம் முன்னோர்கள் கூட்டம் கூடும் திருமணம் மற்றும் துக்க இடங்களில் வெற்றிலை வைத்திருப்பார்கள். 


சாப்பாடு பின் 2 வெற்றிலை, 3 கிராம்பு, 5 மிளகு, சிறிது சர்க்கரை அல்லது தேன், பேரிச்சம்பழம் வைத்து வெற்றிலை போடும் போது தீராத சளி, வரட்டு இருமல் மற்றும் வைரஸ் போன்ற நோய்களை குணமாகும். இதையும் நாம் மறந்து விட்டோம். மறக்கக்கூடாது என்பதற்காக தான் பூஜையில் வெற்றிலை இருக்கிறது.


🔯💛🟡💛🟡💛🟡💛🕉️


5 ஐந்தாவது மஞ்சள் :-


தமிழர்களின் பாரம்பரியம் மறவாமல் அன்று முதல் இன்று வரை எந்த நல்ல காரியத்திற்கும் மஞ்சள் முதன்மையாக இன்று வரை அழியாமல் நிலைத்து நிற்கின்றது.!


கேன்சர் நோயை குணப்படுத்தற்கு மஞ்சளுக்கு அதிக வலிமை உள்ளது!

பெண்கள் கழுத்தில் அணிவதற்கு காரணமே அதன் மருத்துவ வலிமை தான். மஞ்சள் மகத்துவமும், மருத்துவமும் ஏராளம் உள்ளது! 

உடலில் உள்ள புண்களை குணப்படுத்தும். உடம்பிற்கு கெடுதல் ஏற்படுத்தும் செல்களை அழிக்கும் சக்தியாக செயல்படுகிறது...

புற்றுநோய் செல்களை நமது உடலில் பரவாமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு...


🌹🌺🌸🌻☘️🐚☘️🌻🌸🌺🌹


சிந்தியுங்கள் மெய் அன்பர்களே! தமிழர்களின் தெய்வீக வழிபாட்டில் அன்று முதல் இன்று வரை மருத்துவ குணங்கள் பலன்கள் தரக்கூடிய மாங்கல்ய பொருள்கள் இன்னும் ஏராளமாக உள்ளது!


அதன் பயன்பாடுகள், மருத்துவ குணங்கள் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்!

அத்தகை சக்தி வாய்ந்த தெய்வீக பொருள்களை வீணடிக்க வேண்டாம்...

இறைவன் கொடுத்த பொக்கிஷம் 


🍎🍏🍊🍋🍉🍇🥥🍍🥭🫐🍑


நமது தமிழ் முன்னோர்கள்...

இந்து சமயம் பரம்பரத்தையும், கலாச்சாரத்தையும் நமக்கு சிறப்பான வழியில் வழிகாட்டி உள்ளார்கள்... 

அவை அனைத்தையும் வருகின்ற இளைய தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்!

முக்கியமாக பாதுகாக்க வேண்டும்...


மேலும் உங்கள் நல்லாசியுடன் எங்களது ஆன்மீக சேவை தொடரும்...


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

     ✶✶⊷⊷❍ 𝑴.S.Vlr.❍⊶⊷✶✶


ஓம் நமச்சிவாய

தென்னாடுடைய சிவனே போற்றி!

தென்னாட்டவர்க்கும் நிறைவாய் போற்றி!

திருச்சிற்றம்பலம்

தில்லையம்பலம்


🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

No comments:

Post a Comment

🌸 முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிய மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் 🌸

  பயனாளிகள் : 👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவச தரிசன நேரங்கள் : ⏰ காலை – 10:00 மணி ⏰ பிற்பகல் – 3:00 மணி எப்படி உள்ள...