அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான தமிழக அரசின் முத்தான 3 திட்டங்கள்.👇👇👇
1. 7.5% கோட்டா No College Fees No Hostel Fees.
2. புதுமைப்பெண் மாதம் ரூ.1000
3. தமிழ்ப்புதல்வன் மாதம் ரூ.1000
மேற்காண் 3 திட்டங்களுக்கும்
6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
இதில் 7.5 கோட்டா திட்டம்
1. MBBS BDS
2. AYUSH படிப்புகளான BSMS BUMS BAMS BHMS
3. BVSc
4. BFSC
5. BSC Agri Hort Forestry Sericulture
6. BE BTech
7. BA LLB
போன்ற 7 Professional Course -களுக்கு மட்டும் உண்டு.
7.5 கோட்டா Seats விபரம் படிப்பு வாரியாக👇👇👇
மருத்துவம் இடங்கள் சுமார் 650
கால்நடை மருத்துவம் இடங்கள் 42
மீன் வள இடங்கள் 8
விவசாயம் இடங்கள் 350
சட்டப்படிப்பு இடங்கள் 186
BE BTech இடங்கள் சுமார் 11000
என மொத்தம் சுமார் 12000 இடங்கள் மட்டுமே 7.5 கோட்டா இடங்கள்.
7.5 கோட்டா இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் உள்ள தொழில் படிப்புகளுக்கு மட்டுமே (Professional Course) பொருந்தும்.🔴🔴🔴
IIT & NIT போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் சேர்க்கை பெற 7.5 கோட்டா சலுகை கிடையாது.🔴🔴🔴
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் +2 எழுதி உள்ள மாணவ மாணவிகள் சுமார் 8,50,000.
இதில் அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 4, 36,000.
இந்த +2 எழுதியுள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் 4,36,000 ல் முதன்மைப் பாடங்களில் 75 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் சுமார் 12000 பேருக்கு மட்டுமே 7.5% கோட்டா Free Seats கிடைக்க வாய்ப்புண்டு.
ஆனால் 7.5% கோட்டாவிற்கு தகுதி பெற்று கல்லூரியில் சேரும் அனைவருக்கும் மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை நிச்சயம் உண்டு.👍👍👍👍
No comments:
Post a Comment