உட்கார்ந்து படித்தேன் உட்கார்ந்து படித்தேன்
முதுகு வலி!
படுத்தும் படித்தேன் படுத்தும் படித்தேன் பார்வை பலி!
துணி துவைத்தேன் ,
கிழிந்த துணி தைத்து வைத்தேன், மடித்தேன் ,
வீட்டில் வேலைக்கு உதவினேன் ...
நேரம் சென்றது! வயதான பெற்றோரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன்! அவர்களையும் பராமரிக்க வேண்டி இருந்தது!
கேஸ் அடுப்பின் மேல்
பூனை தூங்கியது! கேட்டு, கேட்டு, அமேசான் பாயும் சுகிபாயும்
கேட்ட உணவை டெலிவரி கொடுத்தார்கள்!
இனி அவர்கள் அமேசான் பாய் சுகி பாய் அல்ல
டெட் முடியும் வரை எங்கள் பிள்ளைகள்! உடல் நலம் இன்றி மருத்துவமனை சென்று,
ஏன் வரவேற்பறையிலும் நினைவு படுத்தினேன்! மருத்துவர் அழைப்பின் பேரில் உள்ளே சென்றேன், மருத்துவர் கேட்டார் patient history
பையில் இருந்து எடுத்துக் கொடுத்தேன், மருத்துவர் "TETக்கு படிக்கிறீர்களா" என்று
"ஐயா நீங்கள் மருத்துவர் தானே? ஜோசியர் அல்லவே" என்றேன்.
" medical history கேட்டால் நீங்கள் material history கொடுத்துள்ளீர்களே?" என்றார்.
நான் மாணவனாய் படிக்கும்போது ஆசிரியர் நிம்மதியாய் இருந்தார்... என நான் ஆசிரியரானேன்! இப்போது... சட்டங்களால்... மாணவன் நிம்மதியாய் இருக்கிறார். ஆசிரியர்கள் , இப்போ... ஐயோ பாவம்!
ஐயோ பாவம் என யாரும் நினைக்கவில்லை! அவருக்கு கெட்ட சாபம்!
படிக்க உட்கார்ந்தால் இடுப்போ... நோகும்! பொறுத்துக் கொண்டு படித்தால் நேரம் போகும்!
வீட்டை தாழ் இடாமலே இரவு போகும்!
இது யாரால் ஆசிரியருக்கு விட்ட சாபமாகும்!
" நாங்கள் படிக்கிறோம் காலாண்டுக்கு...
நீங்க படிக்கலையா TETக்கு?" என்பது மாணவனின் கேள்வி! மாணவனுக்கு திருப்புதல் செய்தல், தேர்வு வேலை, விடைத்தாள் திருத்துதல், ... இவையும் எங்கள் வேலை!
இருப்பினும்
TETக்கு படிப்பதே இப்போது எங்களின் வேலை!
கடனட்டை, பற்றட்டை எல்லாம் பயனற்று போகும் என்று... வெளிவேளையில் பற்றற்று படிக்கிறோம். இல்லையேல் எங்கள் வீட்டுக் கடன், மகனின் படிப்பு கடன், திருமணம் செய்ய வேண்டிய கடன், விவசாயத்தில் போட்ட பயிர் கடன்,......
போன்றவையை கட்டுவதும் என்
கடன் அல்லவா!
" தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா!
இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!" என்பது பாரதியின் வரி!
4 , 5 பாடமும் படித்தோம் சர்வேசா! இப்பயிரை TETடால் காப்போம்!
என்பதே என் வழி! தண்ணி பில்லு, கரண்ட் பில்லு, பேப்பர் பில்லு,
பால் பில்லு, மளிகை பில்லு, காய்கறி பில்லு, ...
இதுக்கு மேல.. பஞ்சாயத்து வரி, தொழில் வரி, வருமானவரி, CGST, SGST
இதெல்லாம் எப்படி கட்ட முடியும்? நாங்க இல்லாட்டி SG/BT!
யோசித்து வைக்கணும் ஐயா எங்களுக்கு போட்டி!
55 ஆகியிருந்தா பொழப்பாவது போய் இருக்கும்! 54 ஆனதால ரெண்டு வருடத்துல வேலை போய்விடும்!
இப்படி புலம்புவது எல்லாம்
எனக்கு வந்த வியாதி என்று நினைத்தேன்.
கால் செய்து நண்பனையும் கேட்டேன் அவருக்கும் இப்படித்தானாம்! அப்படி என்றால்
இது TET வியாதி!
அறையில் உட்கார்ந்து படித்த ஆசிரியை நிமிர்ந்து பார்த்தபோது பயந்துவிட்டார் ,
"என்ன தாடி இவ்வளவு நீளம்" என்று தொட்டுப் பார்த்தபோது புரிந்தது
அது எதிரே வந்து உட்கார்ந்த புருஷன் என்று!
பள்ளி செல்ல வெளியே வந்த போது "வீட்டை சுற்றி யார் தோட்டம் போட்டது?" என்று வியப்பு!
இருக்கிற விடுப்பை, கேட்டாலே தர மறுக்கும் நிர்வாகம்
TET லீவு தருவார்களா? எனக்கும்!
இது வேதனை காலம் ,
ஆசிரியருக்கு வந்த சோதனை காலம்
எல்லாம் சில காலம்..
இதுவும் கடந்து போகும்.
"இந்த கவிதையை எழுதிய நேரம் நீ படித்திருக்கலாமே" என்றார் ஒருவர்
"இது உடல் நலம் இன்றி மருத்துவமனையிலேயே படுத்திருந்த காலத்தில் புலம்பியது" என்றேன் நான்.
2011க்கு முன்பே வந்தவர்கள் மீது ஏன் வெறுப்பு
TET மட்டும் அப்படி என்ன சிறப்பு? ...
No comments:
Post a Comment