Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 31 December 2025

பதிவேடு விவரம்


ந.க எண் ( R C No)
ஓ.மு எண் ( L Dis No)
(ஓராண்டு முடியும் எண்)
மூ.மு எண் ( K Dis No)
மூன்றாண்டு முடியும் எண்) 
ப.மு. எண் ( D Dis No)
(பத்தாண்டு முடியும் எண்)
நி.மு.எண் ( R Dis / N Dis) 
( நிரந்தரம்) 
என பல்வேறு வகையான பிரிவுகள் இருந்தாலும் நாம் பள்ளி அளவில்

 *ந.க.எண்* 
 ( நடப்பு கட்டு எண்) 
 *R.C No* 
 ( Current Running Number) மட்டுமே பயன்படுத்தி வருகிறோம்...

தன் பதிவேட்டில் 
 1/1/26 முதல் 
புது ந.க.எண் இட வேண்டும்...

நான் பார்த்த வரையில் சில பள்ளிகளில்..
1/6 (ஜுன்) முதல் 1/2026 என ந.க.எண் இடும் நடைமுறை பின்பற்றுகிறார்கள் ...

அதேபோல் சிலர் 
ந.க.எண் 
1/2025-26 என்றும் பயன் படுத்தி வருகிறார்கள்...

ந.க.எண் கல்வி ஆண்டு அடிப்படையில் கிடையாது...

இது சரியல்ல...

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும்
 *1/1 முதல் தான் புதிய ந.க.எண்* இடப்படும் நடைமுறை...

எனவே பள்ளிகளிலும் நாளை 1 ஜனவரி 2026 முதல்


ந.க.எண் 1/2026 நாள் 2/1/26... 
என்பது போல புதிய 
ந.க.எண் இடப் படவேண்டும்...

ஒரே பொருள் சார்ந்து ஏற்கனவே இடப் பட்ட ந.க.எண் ஐ பயன்படுத்தி கொள்ளலாம்...

எ.கா 2025 நவம்பரில் 123 /2025 என SSLC தேர்வு சார்ந்த கடிதம் எனில்...
ஜனவரியில் அதே பொருள் சார்ந்து எனில்
123 /2025 நாள் 6/1/26 என பயன் படுத்தலாம்
புதிய ந.க எண் இட வேண்டும் என்று இல்லை..

இதை சிலர்...

ந.க.எண் 123 / *2026* நாள் 6/1/26 என்றும் இடுகிறார்கள் அதாவது பழைய ந.க.எண் ஆனால் ஆண்டு /2026 என பதிவு செய்கிறார்கள் இதுவும் குழப்பத்தை ஏற்படுத்தும்..

அதே பொருள் சார்ந்த பதிவு முடியும் வரை அதே ந‌.க.எண் பயன்படுத்தி வரலாம்
கடித நாள் மட்டும் மாறுபடும்....

அலுவலக நகல் (o/c) எப்போதும் பராமரிக்க வேண்டும்...

தன் பதிவேட்டிலும் பதிவுகள் உடனுக்குடன் செய்வது நன்று...

இடைச்செருகல் 43A/2026 போன்றவை சரியானவை கிடையாது...

இடைச்செருகல் A , B... என வழங்குவது குழப்பத்தை ஏற்படுத்தும்..  

பள்ளிகளில் தன்பதிவேடு மட்டுமே பராமரிப்பு செய்யப்படுகிறது...

( அலுவலகத்தைத் போல பகிர்மான பதிவேடு inward outward register / periodical register எல்லாம் இல்லை)...


No comments:

Post a Comment