Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Monday, 19 January 2026

பொங்கல் என்றாலே...

 பொங்கல் என்றாலே

புதுமைகள் பூத்துக் குலுங்கும் 

புன்னகை தவழ்ந்து உலவும்

புத்துணர்வு பொங்கித் தளும்பும்... 

பூபாளம் பாடி இசைக்கும்


உறவுகள் கூடி உவக்கும்

உரிமைகள் பாடி முழக்கும்

உலகமும் ஆடி களிக்கும்

உழவரின் உதவி உரைக்கும்

 

வரவுகள் வாசல் நிறைக்கும்

வண்ணங்கள் வரிசை பரப்பும் 

வானமும் வாழ்த்து படிக்கும்

வசந்தத்தின் வருகை சிறக்கும்


அறுவடை வந்து சேரும்

அல்லலும் அகன்று போகும்

ஆனந்தம் பெருகி யோடும்

ஆசைகள் பூர்த்தி யாகும்


முறுவலில் முகமும் மின்னும்

முதலிடம் பெற்றிட முயலும்

மனதினில் பாசம் பொங்கும்

மணக்கின்ற நேசம் தங்கும்


நண்பர்கள் வாழ்த்து உரைப்பர் 

நன்மையின் ராகம் பாடுவர்

நம்பிக்கை கீதமிசைப்பர்

நட்பினை பேசி மகிழ்வர்


உழவர்கள் உள்ளம் களிப்பர்

உற்பத்தியை எண்ணி இருப்பர் 

வளமெங்கும் பெருகிட விழைவர் 

வாட்டமும் விலகிட மலர்வர்


கதிரவனுக்கு நன்றி பகர்வர்

காளைகளை உச்சி முகர்வர்

இயற்கையை வழிபடுவர்

இன்னலை விரட்டிடுவர்

 

நலம் நிறைந்திட நினைவர்

நல்லது தொடர்ந்திட முனைவர். 

இனம் வாழ்ந்திட இசைவர்.

இல்லம் மகிழ்ந்திட இனிப்பர்.


அனைவருக்கும்  

அன்பான 

ஆனந்தப் பொங்கல் நல்வாழ்த்துகள் ஆர்வத்துடன் விழைகிறேன்


அன்பிலே கலந்து 

ஆசையில் ஆர்ப்பரிக்கும் 

தமிழர் திருநாள் வாழ்த்துகள் சொல்லி நிறைகிறேன்


👏👏👏👏💐💐💐🌸🌸🌸🙏

No comments:

Post a Comment