Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Tuesday, 17 February 2026

Tamil Nadu Budget 2026: பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள்

 

Tamil Nadu Interim Budget 2026: தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 17) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கியமான அறிவிப்புகளையும், திமுக அரசின் சாதனைகளையும் அவர்  பட்டியலிட்டார். அதோடு, எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு தங்கம் தென்னரசு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.


1. பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பின்படி, கடந்த 01.01.2020 முதல் 31.12.2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை மீண்டும் வழங்கப்பட்டது. 

2. அதே போன்று ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்தப்பட்டது. 

3. அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் ஒரு கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் பத்து இலட்சம் ரூபாயும், அவர்கள் குடும்பத்தினர் பெறும் வகையில் வங்கிகள் மூலம் ஆயுள் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

4. பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ஐந்து முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை திருமணச் செலவிற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. உயர்கல்வி உதவியாக பத்து இலட்சம் ரூபாயும்,  

5. அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி பயில முன்பணம் ஒரு இலட்சம் ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்வி பயில முன்பணம் ஐம்பதாயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.  

6. அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் திருமண முன்பணம் ஐந்து இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. 

7. அரசுப் பணியாளர்களுக்கான பண்டிகை முன்பணத்தை இருபதாயிரம் ரூபாயாகவும், ஓய்வூதியதாரர்களுக்கான பண்டிகை முன்பணத்தை ஆறாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. 

8. ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகையை ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

9. பெண் அரசு அலுவலர்களின் மகப்பேறு விடுப்பை 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

10. இவை அனைத்திற்கும் மகுடமாய் அமையும் வகையில், அரசுப் பணியாளர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கான 'தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை' இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான ஓய்வூதியப் பலன்களைப் பெறுவார்கள். 

11. அரசு அலுவலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திட்டத்தில், கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட மாத ஓய்வூதியம், அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம், ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை மொத்தமாகப் பெறும் வசதி மற்றும் இறப்பு மற்றும் ஓய்வுக்காலப் பணிக்கொடை ஆகிய பலன்கள் அடங்கியுள்ளன. 

12. இந்த இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான அரசின் கூடுதல் பங்களிப்பிற்கென ஒட்டுமொத்தத் தொகையாக 11,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment