அரசாணை எண்.152 , நாள்.23-03-20 அத்தியாவசியப் பணிகள் மற்றும் கருவூலத்துறை ஆணையர்/ RJD தொலைபேசி ஆணைப்படி
மாவட்ட / சார்கருவூலங்கள் முழுமையான பணியாளர்களுடன் 31-3-20 வரை, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழக்கம் போல் இயங்கும். பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டைவுடன் வரவேண்டும். பணியாளர்களுக்கு தனியார் வாடகை வாகன போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.
Budget bills, Salary for march 20, பென்சன் உட்பட அனைத்துப் பட்டியல்களையும் அனுமதித்து வங்கிக்கு அனுப்பப்பட வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், சிறு குழந்தை உள்ளவர்கள், மிகத் தொலைதூரப் ( வெளி மாவட்ட) பணியாளர்களுக்கு மட்டும் விடுப்பு அனுமதிக்கப்படும்.
அலுவலர்கள் எவரும் விடுப்பு எடுக்காமல் அலுவலகம் வரவேண்டும்.
பென்சன் மஸ்டரிங் மறுஅறிவிப்பு வரும்வரை தள்ளி வைக்கப்படுகிறது.
உ.க.அ / சா.க.அலுவலர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தொடர்புகொண்டு பேசவும்.
ஒருநேரத்தில் ஒரு துறை அலுவலரை மட்டும் உரிய பாதுகாப்புடன் அலுவலகத்திற்குள் அனுமதியுங்கள்.
பணியாளர்களுக்கு தேவையான மாஸ்க், சானிடைசர், கிரிமிநாசினி உள்ளிட்டவைகளை Permanent Advance லிருந்து வாங்கி கொடுக்கவும்.
பணியாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளி, அடிக்கடி கைக்கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தேவை எனில் காவல்துறை & மருத்துவ துறை உதவிகளை கோர வேண்டும்.
*மிகுந்த கவனத்துடனும்
பொறுப்புடனும் பணியாற்ற வேண்டுகிறேன்* .
கருவூல அலுவலர்,
திருவண்ணாமலை.
இதே போல் அவரவர் மாவட்டங்களில் நமக்காக பாடுபடும் நல்ல உள்ளங்கள் நலமுடன் வாழ நாம் பிரார்த்தனை செய்வோம்
No comments:
Post a Comment