Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Thursday, 26 May 2022

கல்லறையில் அடக்கம்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் உள்ளது. ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது.


அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசி வரை அந்த உடல் கிடைக்கவே இல்லை.

*

பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சிலபோது பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார்.


ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவு தான்..! கடைசி வரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார்.. கத்தினார்.. யாருக்கும் கேட்கவில்லை. காரணம், அவர் தங்குவது வீடல்ல.. அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர்.


பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்கட்டுகளுக்கு மேல் கிடந்து மரணித்தார். மரணிக்கு முன் விரலைக் காயப்படுத்தி சுவரில் எழுதினார் இப்படி: "உலகிலேயே பெரும் பணக்காரர் பசியாலும் தாகத்தாலும் இறக்கிறார்".


சில வாரங்களுக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

*

பணம் மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்கிறது என நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி..


ஒருநாள் உலகைப் பிரிந்தே ஆகவேண்டும். ஆயினும், எங்கே..? எப்போது..? எப்படி..? என்பது மட்டும் புரியவே இல்லை. புரியவும் முடியாது.

*

உல்லாசப் பயணம் சென்றால் திரும்பலாம்.. உலகைப் பிரிந்தால் திரும்ப முடியுமா..?

*

எனவே, யாரையும் வெறுக்காமல், யாரையும் ஒடுக்காமல், யாரையும் காயப்படுத்தாமல், யாரையும் கேவலப்படுத்தாமல், நாங்கள் மட்டுமே நல்லவர்கள் என்று கருதாமல் வாழ்பவருக்கு வாழ்த்துக்கள்....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

No comments:

Post a Comment

🌸 முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிய மூத்த குடிமக்களுக்கான இலவச திருப்பதி பாலாஜி தரிசன திட்டம் 🌸

  பயனாளிகள் : 👉 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவச தரிசன நேரங்கள் : ⏰ காலை – 10:00 மணி ⏰ பிற்பகல் – 3:00 மணி எப்படி உள்ள...